பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

பாப்பா முதல் பாட்டி வரை

மொத்த இந்திய மக்கள் தொகையில், 50 சதவீதம் பேர் பெண்கள். அதாவது 50 கோடிப் பேர் பெண்கள். நோய்வாய்ப்படும் நிலையில் குடும்பப் பொறுப்பைச் சுமக்கும் பெண், உடனடியாகச் சிகிச்சை எடுத்துக் கொள்வதில்லை. உடல் நிலை மிக மோசமான பிறகே, டாக்டரிடம் செல்லும் நிலைதான் உள்ளது. தங்களது உடல் நலத்தில் அக்கறை காண்பிக்கும் ஆர்வம் ஆரம்பத்திலிருந்தே பெண்களுக்கு இருப்பதில்லை.

கோபப்பட சுதந்திரம் இல்லை : பெண்ணுக்கு கோபம் ஏற்பட்டால், அது அடக்கத்தோடு ஒப்பிடப்படுகிறது. பெண் என்றால், அடக்கமாக, அதாவது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எழுதப்படாத சட்டம், நீண்டகாலமாக உள்ளது. உணர்ச்சிகளை வெளிப்படுத்தக்கூடப் பெண்ணுக்குச் சுதந்திரம் கிடையாது. அதே சமயம், ஆண் கோபப்படுவது குறித்து, யாரும் குறை கூறுவதில்லை. நியாயமான விஷயங்களில் கூட கோபத்தை அடக்குவதால், பெண்களின் மனநலம் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு. எனவே தேவையின்றி, உணர்ச்சிகளை அடக்கிக் கொள்ளுவது நல்லதல்ல.

ஆண்களின் ஆதிக்கம் : இன்னமும் 70 முதல் 80 சதவீதம் வரை, ஆண் ஆதிக்கச் சமுதாயத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கணவனைச் சார்ந்து வாழ வேண்டியுள்ளதால், தங்களது விருப்பத்தை - மனத்துக்குப் பிடித்ததைச் சுதந்திரமாகச் சொல்ல முடியாத நிலைக்குப் பல சமயங்களில் தள்ளப்படுகிறார்கள். எந்தவொரு முக்கியமான விஷயத்திலும், பெரும்பாலும் ஆணின் முடிவை ஏற்றுக்கொள்ளும் நிலையும் ஏற்படுகிறது.

ஆண் குழந்தையா, பெண் குழந்தையா-யார் காரணம்?: பிறக்கும் குழந்தை பெண்ணாக இல்லாமல், ஆணாக