பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

145

செயல்படும் எதிர்ப்புச் சக்தி ஏற்பட வாய்ப்பு உண்டு. இந்த எதிர்ப்புச் சக்தி, பெண்ணின் உடலில் இருப்பின், உடல் உறவு கொள்ளும்போது, விந்துவில் உள்ள உயிர் அணுக்கள் பெண்ணின் யோனிக் குழாயில் விழும் போது, பெண்ணின் உடலில் இருந்து எதிர்ப்புச் சக்தி கிளம்பி, ஆண் அணுக்களை செயலிழக்கக் செய்து விடுகிறது.

விரையில் அடிபடுதல், விரையில் ரத்தக் கட்டி, விரையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தால் ஆணுக்கு, உயிர் அணுக்களில் எதிர்ப்புச் சக்தி உருவாக வாய்ப்பு உண்டு.

இதனால் கரு தங்காமல் போகலாம். மீறி கரு நின்றாலும், கருப்பையில் பதிந்து வளராமல் இருக்க வாய்ப்பு உண்டு. கரு பதிந்து வளர்ந்தாலும், உயிரற்ற கரு மட்டும் வளர்வதற்கும் வாய்ப்புகள் உண்டு.

கருப்பை வாயில் சுரக்கும் திரவத்திலும், கரு முட்டை இருக்கக்கூடிய திரவத்திலும், இந்த எதிர்ப்புச் சக்தி அதிகம் காணப்படுகிறது. எல்லோருக்கும் இந்த எதிர்ப்புச் சக்தி இருக்கும் என்று பயப்படத் தேவை இல்லை. எதிர்ப்புச் சக்தி இருப்பதை ரத்தப் பரிசோதனை மூலம் முறியடித்து விடலாம்.

சோதனைக் குழாய்க் குழந்தை : கரு முட்டையும், ஆண் உயிர் அணுக்களும், ஒன்றையொன்று சந்திக்க இயலாத நிலையில், ‘டெஸ்ட் டியூப்’ முறை செய்யப்படுகிறது. ஆண் அணுக்களையும் கரு முட்டையும் மருத்துவ ரீதியில் வெளியே இணைத்து கருவினைக் கருப்பையில் செலத்துவதுதான் ‘டெஸ்ட் டியூப்’ முறை. இணைக்கப்பட்ட கரு, கருப்பையின் சுவரில் பதிந்து வளர ஆரம்பித்து விடும்.

ஒரு பெண்ணின் கருவகத்தில் சாதாரணமாக மாதமொன்றுக்கு ஒரு கரு முட்டைதான் உருவாகும். டெஸ்ட் டியூப் முறையில் பல கரு முட்டைகள் தேவை.