பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

176

பாப்பா முதல் பாட்டி வரை

அந்தப்படங்களை வீடியோவில் பதிவு செய்து, மருத்துவரும், நோயாளியும் காண இயல்கிறது.

தொண்டை அழுத்தம் : தொண்டையின் உள் பாகத்தில், எல்லாச் சமயங்களிலும், ஏதோ ஒரு பொருள் அழுத்துவதுபோல் தோற்றம், பலருக்கும், குறிப்பாகப் பெண்களுக்கு வர வாய்ப்பு உண்டு. இதுபோன்ற அறிகுறி உள்ளவர்கள் உணவு விழுங்குவதற்கு அடைப்பு இல்லாதவரை, பீதியடைய வேண்டியதில்லை. ரத்தத்தில் இரும்புச் சத்து குறைவதாலும், மன அழுத்தம் அதிகம் உள்ளோருக்கும், உணவுக் குழாயின் மேல் பாகம் அடையும் சில மாற்றங்களினால், இந்த அறிகுறி வருகிறது. தகுந்த மருந்துகளின் மூலம், இதிலிருந்து குணமடையலாம்.

மேலும் சிலருக்குத் தொண்டைப் பாகங்களில் உண்டாகும் வியாதிகள், கழுத்துப் பாகத்தில் கட்டிபோல வீக்கமடைந்து, தோற்றம் கொள்கின்றன. அந்த பாகத்தில் 15 நாளுக்கு மேல் தொடர்ந்து வீக்கம் இருந்தால், தொண்டையின் உள் பாகம், மூக்கின் பின் பாகம் போன்றவற்றையும், அவசியம் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். ஏனெனில், அறிகுறிகள் இல்லாத உடலின், உள் வியாதியின் ஒரு பிரதிபலிப்பாக இந்தக் கழுத்து வீக்கம் இருக்கலாம்.

குரல் மாற்றம் : ஆண்களுக்குப் பெண்குரல், பெண்களுக்கு ஆண்குரல், போன்ற தன்மைகள் உள்ளவர்களுக்கு Speech Therapy எனப்படும் பேச்சுப் பயிற்சி மருத்துவம் பரவலாக, பல்லாண்டுக் காலமாகச் செய்யப்பட்டு வந்தது. இந்த முறையில் குணமடையாதவருக்கு தற்போது (Phono surgery) எனும் நவீன சிகிச்சைமுறை, ஜப்பானிய டாக்டர், விஞ்ஞானி இஷிகி என்பவரால் சீரமைக்கப்பட்டு, நடைமுறையில் உள்ளது. ஆச்சரியமான இந்த முறையில்,