பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

185

பழக்கங்கள் காரணமாகத், தாடைகள் முன்னோக்கி வளர்ந்து, பற்கள் கோணலாக வளர்ந்து, முகப்பொலிவு கெடுகிறது. கம்பிகளைப் பொருத்திக் கோணல் பற்களைச் சரி செய்துவிட முடியும். தெற்றுப் பற்களையும் வரிசைப் படுத்தி விடலாம்.

நிறம் மாறும் பற்கள் : மஞ்சள் கலந்த வெண்மையே பற்களின் இயல்பான நிறம். பல காரணங்களால், பற்களின் நிறம் மாறுவது உண்டு. சேலம், தர்மபுரி, பெரியார் மாவட்டங்களில் கிணற்று நீரில் அதிகமாக புளோரைடு உள்ளது. இந் நீரைக் குழந்தைப் பருவத்தில் பற்கள் முளைக்கும் காலத்தில் குடிப்பதால், பற்கள் காவி நிறமாக முளைத்து, ஆயுள் முழுவதும் காவி நிறமாகவே நீடிக்கிறது. பாலீஷ் செய்தாலும், இக் காவிப் பற்களை ஒன்றும் செய்ய முடியாது. கருவியைக் கொண்டு காவியை அகற்றிவிட்டு வெண்மை நிறத்தில் பல்லுக்கு மேல் உறை போட்டுப் பொலிவு கொடுக்கலாம். இம் மாவட்ட மக்கள், காவியைத் தடுப்பதற்கு, குழந்தைகளுக்காவது பாதுகாக்கப்பட்ட குடிநீரைக் கொடுக்க வேண்டும்.

வாய்ப்புண் : சிலருக்கு வாய்ப்புண் வந்து, வந்து போவது உண்டு. ரத்தச்சோகை, காசநோய், தொற்று நோய்கள், மருந்துகள் ஒவ்வாமை, காரணமாக வாய் புண்கள் வரக் கூடும். பி காம்ப்ளக்ஸ் சத்துக்குறைவு காரணமாகவும், வாய்ப் புண்கள் வரும். வாய்புண்ணுக்கு சிகிச்சை அளிக்க, மாத்திரைகள் உள்ளன. மணத் தக்காளிக் கீரையை வேகவைத்துச் சாப்பிடுவது, வாய்ப்புண் ஆற உதவும்

வாயும், பற்களும், உடல் உறுப்புகளுடன் நெருங்கிய தொடர்பு உடையவை. இதனால் வாய், பல் நலம் பாதிக்கப்பட்டால், உடல் உறுப்புகளும் பாதிக்கப்படும். வாய் நலத்தைப் பார்த்துக்குங்க. உடல் நலத்தைக் காத்துக்குங்க.