பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

பாப்பா முதல் பாட்டி வரை

மீதுள்ள மெல்லிய தோல் நோயுற்று, நலிந்து, நாக்கு ரணமாக, இரத்தச் சிவப்பாகக் காணப்படும். இதைத் தவிர, உணவில் ரீபோபிளேவின் எனப்படும் 'பி' வைட்மின் போதாவிடில், நாவில் பலவிடங்களில் சிறு புண்கள் காணப்படலாம்.

பசியின்மை : குழந்தைகளுக்கு எளிதாக ஏற்படும் நோய்களில் இது ஒன்று. 1. சளிப்புப்போன்ற சாதாரணத் தொந்தரவு முதல், எல்லா விதமான காய்ச்சல்களும். 2. உணவில் தேவையான சத்துப் பொருள்கள் இல்லாமையால் உடம்பைப் பீடிக்கும் நலிவு. 3. பல் முளைக்கும் பருவம். 4. அம்மை குத்துவதால் ஏற்படும் காய்ச்சல். 5. செயற்கை ஊட்டத்தில், ஒரு குறிப்பிட்ட உணவின் மீது சலிப்புத் தட்டி விடுதல். 6. கணைநோய். 7. குடற்பூச்சிகள். 8. களைப்பு. 9. பிடிவாத அழுகை.

சிகிச்சை : காரணம் அறிந்து சிகிச்சை செய்தால் பசி ஏற்பட்டு விடும். உடல்நலத்தைப் புறக்கணிக்காது, ஊட்டமான உணவுகளை ஒழுங்கு முறை தவறாது அளித்தால், பசியின்மை ஏற்படாது. அதிகப் படிப்பினால் களைத்துப் போகும் குழந்தைக்குத் தக்க ஓய்வு கொடுத்தால் பசி ஏற்படும்.

வாந்தி : பிறந்தவுடன் குழந்தை வாந்தி எடுப்பதின் காரணம், பிறந்த குழந்தைக்கு வரும் நோய்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மற்றவை இங்கே காணலாம்.

வாந்தியின் காரணங்கள் : 1. உணவு அளிக்கப்படும் முறைகளில் ஏற்படும் தவறுகள்: குழந்தை விரைவில் வளரவேண்டும் என்ற ஆர்வத்தில், தேவைக்கு மீறிய அளவு உணவு அளிப்பது, அளிக்கும் அளவில் ஒழுங்குமுறை இல்லாமை, ஒத்துக் கொள்ளாத உணவுகளை அளித்தல், உணவுடன் குழந்தை காற்றையும் விழுங்குதல். 2.