பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

பாப்பா முதல் பாட்டி வரை

பாதிக்கும் நோய், சளிப்பு என்றும், நீர்க்கோவை என்றும் அழைக்கப்படுகின்றது.

காரணம் : இந்த நோய்க்குக் காரணம், ஒரு வகையான வைரஸ் கிருமியாகும். இவை ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு நோயைப் பரப்பும் ஆற்றல் கொண்டவை. நோயின் தொடக்கத்திற்கு வைரஸ் கிருமிகள் காரணம் எனினும், அதற்குப் பிறகு, மூக்கில் சளி கசிந்து கெட்டியாக வெளிப்படுவதற்கு, வேறு சளி நச்சுக் கிருமிகள் காரணமாகின்றன. இந்த கிருமிகள் வந்து குடியேறி, விருத்தியடைந்து, சளி நோயை உற்பத்தி செய்ய சில தனிப்பட்ட காரணங்கள் முக்கியமாக உண்டு. 1 வயது பிறந்ததிலிருந்து சுமார் ஐந்து மாதம் வரை சளிப்பு, குழந்தைகளுக்கு அதிகம் வருவதில்லை. இந்தப் பருவத்தில் மூக்கின் உட்புறத்தோல், வைரஸ் கிருமிகள் விருத்தியடைய ஏற்றதாக இருப்பதில்லை. இதுவே காரணம் என்பது ஒரு சாரார் கொள்கை. ஐந்து மாதங்களுக்கு மேற்பட்ட குழந்தை அடிக்கடி சளி பிடித்துக் கொள்வது இயற்கை. 2. ஊட்டக் குறைவு, வைட்டமின்கள், சிறப்பாக வைட்டமின் ஏ குறைவாக இருத்தல். 3. தொண்டைச் சதை, அடினாய்டு, மூக்கடித்துவாரங்கள் (sinuses) முதலியவைகளில் தொற்று ஏற்படுதல். 4. தூசியுள்ள இடத்திலும், குறைந்த காற்றோட்டமுள்ள இடத்திலும் வசித்தல். 5. அதிகக் குளிரில் இருத்தல், மழையில் நனைதல், கூட்டமான இடத்தில் அதிக நேரம் இருந்து விட்டு, சட்டெனக் காற்றோட்டமான திறந்த வெளிக்கு வருவது. 6. தலை முழுகிய பின்பு தலையை நன்றாகத் துவட்டாமல் ஈரமாக விட்டுவைத்தல். 7. பசி, குழந்தையின் உடல் நலத்தைக் கெடுத்துச் சளிக் கிருமிகள் குடியேறி விருத்தியடைய அனுகூலம் செய்தல்.

நோய்க் குறிகள் : ஒரு வயதிற்குட்பட்ட குழந்தை, அடிக்கடி அழும். முகம் சிவந்து காணப்படும். உடல்