பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

57

முடியாமை, வாத நோயைப்போல் காணப்படுவது, கைகால்களை மடக்கிகொண்டு நீட்ட முடியாமை, ஊமை, இருமல், விக்கல், வீரிட்டு அலறி மூர்ச்சையுறுவது போன்ற, பலவிதமான அறிகுறிகளுடன் தோன்றலாம். இதை ஹிஸ்டீரியா தான் எனத் தீர்மானமாகக் கண்டுபிடிப்பதற்கு மருத்துவர்களால் தான் இயலும்.

சிகிச்சை : சூழ்நிலை மாற்றம் உகந்த சிகிச்சை, அதிகக் கண்டிப்போ, சலுகையோ காட்டாது, குழந்தையின் நோயைப் பற்றிச் சிறிது பாராமுகமாக இருந்தால், நோயைப்பற்றிக் குழந்தை மறந்துவிடத் துவங்கும். நடக்க முடியாதபடி வாத நோயல் படுத்துக் கிடக்கும் குழந்தையைத் தகுந்த மருத்துவரைக்கொண்டு சிகிச்சை செய்வது நலம்.

குழந்தைப் பள்ளி : சாதாரணமாக 2 முதல் 5 வயது அல்லது 6 வயது வரயுைள்ள குழந்தைகளுக்காக ஏற்பட்டது குழந்தைப் பள்ளியாகும். ஆனால், சில நாடுகளில் 7 வயது வரையுள்ள குழந்தைகளையும் இப் பள்ளிகளில் சேர்த்துக் கொள்கிறார்கள்.

குழந்தைப் பள்ளியானது, குழந்தைக் காப்பு விடுதிக்கும், ஆரம்பப் பள்ளிக்கும் இடையே, ஒரு முக்கிய நிலையமாக இருந்து வருகிறது.

நோக்கம் : குழந்தைகளுடைய உடல் வளர்ச்சிக்கும், உள வளர்ச்சிக்கும் ஏற்ற சூழ்நிலையை அமைத்துக் கொடுப்பதும், அச் சூழ்நிலையில் ஆசிரியர்களின் மேற்பார்வையில் குழந்தைகள் பயமின்றிச் சுயேச்சையாக வாழச் செய்வதும், பயமில்லாமல் வாழச் செய்வதன் மூலம் உண்மை பேசும் வழக்கத்தை வளர்ப்பதும், நற் பழக்கங்களை உண்டாக்குவதும், உடல் வளர்ச்சிக்கான ஊட்டத்தையும், பயிற்சியையும் அளிப்பதும், குழந்தைப் பள்ளியின் முக்கிய நோக்கங்களாகும்.