பக்கம்:பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்

9

தமிழனுக்குச் சிரம் வணங்கிக் கைகூப்பி வணக்கம் தெரிவித்தான். அவன் தலையை நிமிர்த்திய போது, “க...கூ... ...க்கூ” என்று பயங்கரமான தீனக்குரல் கேட்டது. நாற்புறமும் திரும்பிப் பார்த்தான். பூங்காவின் வடக்குக் கோடியில் காரின் அடியில் நசுக்கப்பட்டு உயிர்விட்ட ஒரு நாயைக் கண்டான். உடல் நடுங்கியது. அவனுக்கு அழுகை பீறிட்டது. அப்பொழுது அங்கு ஓர் அதிசயத்தைக் கண்டான். அழகானதொரு நாய்க் குட்டி அந்த நாயின் அருகில் கிடந்தது. விழிகளை நிமிர்த்திக் கூட்டத்தை நோட்டம் விட்டான். கார் டிரைவர் நாயின் உயிரைக் கொன்றதுமின்றி, அதன் வழியே உயிரையும் தட்டிக் கொண்டு போக எண்ணுவதை ஊகித்தது, பிஞ்சு நெஞ்சம். அவ்வளவுதான்; பூபாலன் அந்த நாய்க் குட்டியை எடுத்துத் தன் பையில் திணித்துக் கொண்டு பிடித்து விட்டான் ஓட்டம்!