பக்கம்:பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



2. அந்த நாய்க்குட்டி...

“அம்மா...அம்மா! என்று அலறிக் கொண்டு ஓடி வந்தான் பூபாலன். ரேழி யில் இருந்த தண்ணிரை மொண்டு மடக் மடக்கென்று குடித்தான். பெரு மூச்சுக்கு அணைகட்ட muடியவில்லை.

அஞ்சலை என்னவோ ஏதோ என்று பதறிப்போனாள்.

“அம்மா,நான் போன வருஷம் பள்ளிக் கூடத்திலே தங்கப்பதக்கம் ப்ரைஸ் வாங்கினேனே, நினைவிருக்குதா?”

“ஆமாடா, தம்பி. வாயில்லாப் பிராணி களிடம் அன்பு காட்டனும்னு நீ பிரசங்கம் செய்ததுக்குப் பதக்கம் தந்தாங்க சர்க்காரிலே. என்ன சேதி?...”

“சொன்னபடி நடக்கணும்னுதானே பெரியவங்க அடிக்கடி சொல்லுறாங்க...?”

“என்னென்னமோ கேட்கிறியேடா? கண்ணு! வேளாவேளைக்குச் சாப்பாட்-