பக்கம்:பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
6, டுமீல் டுமீல்...

சுகுமார் சர்க்கஸ் கம்பெனியில் மாட்டப் பட்டிருந்த காலண்டரில் இரண்டு மாதத்தியத் தினசரித்தாள்களைக் காலதேவன் திருடிச் சென்றுவிட்டானாம்!

அன்று சர்க்கஸ் கொட்டகையில் எள் விழுவதற்குக்கூட இடம் இல்லாதபடி கூட்டம் கூடியிருந்தது. மாஸ்டர் பூபாலன் புதிதாக அரங்கேறி, ஊசலாடிக் கொண்டிருக்கும் கம்பி வளையத்தில் நின்று விளையாடும் காட்சிகளைப் பற்றிய விளம்பரங்களெல்லாம் பலன் பெறாமல் போய்விடுமா, என்ன?

ஆயிற்று கோமாளி வந்து கூத்தடித்துச் சென்றான். அடுத்தவன் வந்து கரணம் போட்டுச் சென்றான். மூன்றாவது மகள் அல்லி, வந்து ‘ஜிப்பி டான்ஸ்’ ஆடிச் சென்றாள்.