பக்கம்:பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
1. அதிசயங்கள் இரண்டு

“இப்போ நிறுத்தப் போகிறாயா...? இல்லையா...?”

“முடியாது”

“முடியாதா?”

“ஆமா, முடியாது!”

“தம்பி, நீ சிறுபிள்ளை. நான் சொல்கிறதைக் கொஞ்சம் கேள்.”

“முடியாது”.

“முடியாதா?”

“முடியாது; முடியாது; முடியாது...!”

“பூபாலன்!”

ஆ!...

“ஏன் அப்படி அதிசயப்படுகிறாய்?”

“என் பெயர் உமக்கு எப்படித் தெரிந்தது?”

“தெரியும்.”