பக்கம்:பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்

57

“ஆமாம், தம்பி!” என்று சொல்லித் தன் மகனின் முகத்தை அன்போடு வருடி னான் முருகேசன்.

திக்கு திசை எதுவும் புரியவில்லை பூபாலனுக்கு, அருகே நின்று தன்னையே அன்பு பொங்கப் பார்த்துக் கொண்டிருந்த சிறுமி பூங்கோதையை நோக்கினான் பூபாலன்.

“தங்கச்சி, நான் இப்போ எங்கே இருக்கிறேன்.”

“எல்லோரும் உங்க பிறந்த ஊரிலேலேதான் இருக்கிறோம்—பட்டணத்திலே இல்லே! அண்ணா, உனக்கு நிம்மதி கிடைக்க வேணுமென்றுதான் இங்கே பூவைமா நகருக்கு உன்னைக் காரிலே கொண்டாந்தோம். இத்தனை நாளாத்தான் உனக்கு சுய நினைவே வரல்லியே! இனியாச்சும் நடந்த கதையை யெல்லாம் மறந்திடு. மத்தியானத்துக்கு இந்த ஊரிலே மாரியம்மன் தேர் திருநாள் நடக்குதாம்—அதைப் படம் பிடிக்கப்போறாங்க எங்க அப்பா. சினிமாக் கம்பெனிக்காரங்க கூட வந்திருக்காங்க. இளைஞர் சங்கத்-