பக்கம்:பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு

அப்பொழுது—

“தம்பி!” என்ற குரல் - இரட்டைக் குரல் ஒன்றாகி ஒலித்தது.

பூபாலன் திரும்பினான்.

அங்கே அவனுடைய தாய் தந்தையர் நின்றார்கள்.

அவன் தலையைத் திருப்பிக்கொண்டான். “நம்ப மாரியம்மன் கிருபைதான். அப்பா மேலே நீ கோபப்படாதே, தம்பி. அந்தச் சர்க்கஸ்கார ஐயாதான் உன் அப்பாவுக்கு வேலை வாங்கிக் தொடுத் தாங்க. உன்னை பெரிய சர்க்கஸ்கார னாக ஆக்கிப்பிடுகிறதாகவும் சொன்னார். ஆனா, இப்படியெல்லாம் இல்லாதும் பொல்லாதும் நடக்குமின்னு நாங்க என் னத்தைக் கண்டோம்? நாம் இனி நம்ப பிறந்த இடத்திலேயே தங்கி வெள்ளாமை விளைச்சலைப் பார்த்துக்கிட்டிருப்போம்... போதும், பட்டணத்து வாழ்வு!” என்று சொல்லிக் கண்ணீர் பெருக்கினாள். பூபாலனின் அன்னை.