பக்கம்:பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்

55

பாட்டாங்க; அப்புறம் உன்னைச் சேர்க்கஸிலே விளையாடச் செய்ய ஒரு பாவி சதி செஞ்சான். இப்போ நீ அழகாப் பேசற துப்பு வெளியே தெருவே பரவினா, பிரசங்கம் செய்யறதுக்கு உன்னை யாராச்சும் ஏரோப்ளேனிலே தூக்கிட்டுப் பறந்திடப் போறாங்க. உஷார்! கபர்தார்!”

“நீ கூட ஜாக்கிரதையாக இருக்கணும், தங்கச்சி, நீ பேசத் தொடங்கிட்டா என் காதிலே தேன் வந்து பாயுது. அப்புறம் நான் அடையும் சந்தோஷத்திலே திரும்பவும் மயக்கம் வந்திடப் போகுது!” என்று பதிலுக்குச் சொல்லிவிட்டுப் பலமாகச் சிரித்தான் பூபாலன்.

“அண்ணா, இன்னும் கொஞ்சம் சிரி அண்ணா!... சிரிச்சுக்கிட்டே இரு அண்ணா! இந்த மாதிரிச் சிரிப்பைக் கண்டு எத்தனை யுகமாயிடுச்சு?...”

“தங்கச்சி!”

பூபாலனால் மேற்கொண்டு பேச முடியவில்லை. கண்களில் பொங்கி வந்த கண்ணீர், வாய்க்குள்ளிருந்து புறப்பட்ட வார்த்தைகளைத் தடுத்துவிட்டது.