பக்கம்:பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு

யைத் தேடி எமலோகம் போயிருப்பேன். பெற்றவங்க அன்புன்னா அது என்னான்னு நான் கேட்க வேண்டிய நிலையிலே இருக்கேன். ஆனா உன் அன்பைப்பற்றி, என் பேரிலே நீ கொண்டிருக்கிற அந்தப் பாசத்தைப் பற்றி நான் மணிக்கணக்கிலே பேசுவேன். ஆனா ஒண்ணு!-மேலே இருக்கிறதாச் சொல்றாங்களே, அந்த ஆண்டவன் நம்ப ரெண்டு பேர் அன்பையும் அறிஞ்சுக்காம இருந்தாரோ, நாம் பிழைச்சோமோ? பூதக் கண்ணாடி வச்சு இந்த ரகசியத்தைப் புரிஞ்சுக்கிட்டாரோ, அப்புறம் நமக்கு சோதனை காட்ட அவர் மூளை துரிதமாக வேலை செய்ய ஆரம்பமாகிடும்...!”

‘களுக்’கென்று சிரித்தாள் பூங்கோதை. முத்துப் பற்கள் பிஞ்சு உதடுகளுக்கு அழகு சேர்த்தன.

“அண்ணா, நீ இப்படிப் பேசுகிறதைக்கூட திரைமறைவாத்தான் வைத்துக் கொள்ள வேணும். முன்னே, உன்னைப் படத்திலே நடிக்க எங்க அப்பா வலை-