பக்கம்:பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்

59

அழகிய நாய்க்குட்டியைக் கொடுத்தார் பூங்கோதையின் தந்தை.

“ஊஹும், இது எனக்கு வேண்டவே வேண்டாம். என் நாய்க்குட்டி இல்லை இது. ஒரு தரம் நான் பட்ட பாடு, அனுபவிச்ச வேதனை யெல்லாம் போதும்!” என்று சொல்லிப் புலம்பினான் அவன்.

மத்தியான்னம்—

“பூங்கோதை!” என்று அழைத்தான் பூபாலன். பிறகு, உள்ளே எட்டிப் பார்த்தான்.

பெண்கள் நாலைந்து பேர் சிறுமி பூங்கோதையைச் சுற்றி நின்று கொண்டு பாட்டுப் பாடிக்கொண்டிருந்தார்கள். ஆஹா! எவ்வளவு அற்புதமான காட்சியுடன், இனிமையான் பாடல்.

குங்குமத்தின் பொட்டுதனை நெற்றியிலிட்டு
குலச் சுடராம் கோதைக்கு வாழி பாடுவோம்.
எங்கள் குலக் கொடியில் பூத்த பூங்கோதை;
எல்லோரும் அன்பு செயும் நல்ல பூங்கோதை.
மங்களப் பிறந்த தினம் போற்றி மகிழ்வோம்.
மலரி தழைத் தூவி இறை பதம் பணிவோம்;