பக்கம்:பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு

தங்கத்தைப் பொடி செய்து கோல மிடுவோம்;
தந்தத்தை வந்தவர்க்குச் சீர் வழங்குவோம்!

“பூபாலா , புறப்படு. இன்றைக்கு ஷூட்டிங் இருக்கு. பூவை மாநகர் மாரி யம்மன் தேர் திருநாளையும் படம் பிடிக்க வேணும். நீயும் கோதையும் அற்புதமாக நடிச்சிடணும்?” என்றார். கோதையின் தந்தை டைரக்டர் பரசுராம்.

“ஓ!”— ஒரு குரல் மட்டுமல்ல; இரட்டைக் குரல்!

கோயிலின் எதிர்ப்புறத்தில் இருந்த பங்களாவில் படப்பிடிப்புக்குரிய வேலைகள் நடைபெற்றன.

தேர் ஊர்வலம் படமாக்கப்பட்டது.

பிறந்த நாள் வைபவ வாழ்த்துப் பாட்டைச் சற்று முன் பூபாலன் கேட்டு மெய்மறக்கவில்லையா? அதே பாட்டைத் திரும்பவும் பாடினார்கள்.

பூங்கோதை சிரித்தவண்ணம் நின்றாள். அப்பொழுது பூபாலன் மகிழ்ச்சி பொங்க, ஓர் அழகிய வைரச் சங்கிலியை