பக்கம்:பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்

69

உடனே அவர் என்மீது குறிவைத்து வீசிய அதே கத்தியை பதிலுக்கு நான் குறிவைத்து அவரை நோக்கி வீசினேன். அடுத்த நிமிஷம் போலீஸ்காரர்கள் என்னைக் கைது செய்தார்கள். இந்த வைரச்சங்கிலியைப் பற்றிய விவரம் எதுவுமே எனக்குத் தெரியாது. நான் நிரபராதி! சுகுமார் சொல்வது பொய். அவருடைய வைரச்சங்கிலியை நான் வேலை பார்த்தபோதே திருடி வந்துவிட்டதாகப் பழி சுமத்துவது அபாண்டப் பொய். நான் நிரபராதி. கடவுள் சாட்சியாக நான் சொன்னது பூராவும் நிஜம்...!”

மாஜிஸ்டிரேட் சைகை காட்டினார். எஸ்.ஐ எழுந்து சென்றார். அந்தக் கத்தியும் அந்த வைரச் சங்கிலியும் இப்பொழுது அவரது மேஜையில் கிடந்தன. மாஜிஸ்டிரேட் அவை இரண்டையும் புரட்டிப் பார்த்தார் ‘சுகுமார்’ என்ற அழகான எழுத்துக்கள் மின்னின. அடுத்த மூன்றாம் நாள் தீர்ப்புச் சொல்லப்படுமென்று அறிவிக்கப்பட்டது.

மூன்றாம் நாள்.....!

பா—5