பக்கம்:பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு

“என் பெற்றோர்கள் பேரில் நான் கொண்டிருந்த ஆத்திரத்தையும் அவர்கள் மாற்றி விட்டார்கள். சென்ற வாரம் ஷூட்டிங்கில்—தேர் திருவிழாவில்—நானும் பூங்கோதையும் நடித்தோம். ”

“கோதையின் பிறந்த நாள் பரிசாக ஏதாவது கொடுக்க வேண்டுமென்று எண்ணியவாறு நடந்து முன் சென்ற போது, வழியில் ஒரு புத்தம் புதிய வைரச் சங்கிலி கிடக்கவே, சடக்கென்று அதை எடுத்து சமயோஜிதமாக என் அன்புக் கோதைக்குப் பரிசளித்து விட்டேன். அவளோ அதையே கழற்றி எனக்குத் தன் பரிசாகத் திரும்பப் போட்டுவிட்டாள்! சிறிது நேரம் சென்றதும் என்னை நோக்கி ஒரு கத்தி வருவது கண்டு விலகிக் கொண்டேன். குறி தவறிய கத்தி சிறிது தூரம் தள்ளி விழுந்தது. எதிரே பார்த்தேன். இந்தச் சர்க்கஸ்காரர் என் முன் நின்றார். என்மீது அவருக்கு இருந்த பல நாள் கோபத்துக்கும் ஆத்திரத்துக்கும் வஞ்சம் தீர்த்துக்கொள்ளத்தான் இச் சதி செய்திருக்கிறார் என்று தோன்றியது.