பக்கம்:பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு


பெக்டர் தங்கப் பதக்கத்தை நாயின் கழுத்தில் மாட்டினார்.

வாலைக் குழைத்துச் சிரித்த கோஹினூரை முகத்தோடு முகம் பொருத்திக் கொஞ்சினான் பூபாலன்.

“எல்லாருக்கும் என் வணக்கமும் நன்றியும். எனக்குப் புது வாழ்வு தந்த அன்பு ஜீவன் என் அருமை கோஹினூர். என் உயிருள்ள மட்டும் அதை என்னால் மறக்கவே முடியாது—!” என்றான் பூபாலன், உணர்ச்சி குமிழியிட்ட குரலில்.

“பூபாலன் அண்ணாச்சி! எங்க படத்திலே இன்னொரு காட்சி எடுக்க வேண்டியிருக்குதாம். அதிலே நீ, நான், அல்லி, உன் கோஹினூர் எல்லாருமே சேர்ந்து நடிச்சிடுவோம்...ம்! ஓ.கே சொல்லித்தான் தீரணும்! நாளைக்குப் பட்டணத்துக்குப் பயணப்படணும–!”

"பூங்கோதை உன் பேச்சைத் தட்டிப் பேச எனக்கு ஏது உரிமை?என்றான் கண்களைச் சிமிட்டியபடி.

உடனே எல்லோரும் சேர்ந்து ‘களுக்’ கென்று சிரித்தார்கள்—ஆமாம்! கோஹினூரும் சேர்ந்து தான்!

பின், அவர்களின் ஆனந்தத்துக்குக் கேட்கவும் வேண்டுமா?