பக்கம்:பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்

7

பூபாலனின் வயிற்றுக்குள் சோற்று உருண்டைகள் இருபது போனதும்தான் தெம்பு வந்தது.

அப்பொழுது அவன் தந்தை முருகேசன் வந்தார்.

“அப்பா, என்னை அம்மா மண்டுங்கறாங்களே?- நான் முட்டாளாயிருந்தா வருஷத்துக்கு வருஷம் இப்படிப் பாஸாவேனா?... என் சுய கெளரவத்தை யார் குறைச்சலா மதிச்சாலும் எனக்கு நெஞ்சு பொறுக்காது” என்றான் பூபாலன்.

“பலே, மகனே! முதலிலே நீ ஒழுங்காப் பள்ளிக்கூடத்துக்குப் போ. அப்புறம் பெரிய மனிதனாக ஆகலாம். எனக்கு உடம்புக்கு முடியலே. அதாலே எங்க கண்ணாடித் தொழிற் சாலையிலே லீவு சொல்லி வந்திட்டேன்,” என்று சொன்னார் முருகேசன்.

புத்தகப் பையுடன் பூபாலன் ஸ்கூலுக்குப் புறப்பட்டான். சுவரில் பதிந்திருந்த உடைந்த கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டு, கையால் தலையைக்