பக்கம்:பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு

“உனக்குப் பசிக்குதின்னா அரை நாழிப் பொழுதிலே சோறு சமைச்சுப் போடுறேன். ஏன் பசிக்கிதுங்கறதுக்கு உன் வயிற்றைக் கேட்டுத்தான் பதில் தெரிஞ்சுக்கோணும். நாம்ப ஏழைங்க பாரு; நமக்கும் பசிக்கும் மட்டுந்தான் ரொம்பச்சொந்தம்,” என்றாள் பூபாலனின் தாய் அஞ்சலை.

“இன்னிக்கு நான் ஸ்கூலுக்குப் போகலேம்மா!”

“ஏண்டா?”

“ஏண்டாவா? அம்மாவுக்குக் கோபத்தைப் பாரு, கோபத்தை...! அந்தக் காலத்திலே எல்லாப்பெரிய மனிதர்களும் சின்ன வயசிலே அடிக்கடி பள்ளிக்கூடத்துக்கு டிமிக்கி அடிச்சவங்கதானாம். அது போல, நான் இப்போ ஸ்கூலுக்கு மட்டம் போட்டா, அப்பாலே நானும் பெரிய மனிதனாகிப் போயிடுவேனாக்கும்!” என்றான் சிறுவன், சிரித்தபடி.

“போடா, மண்டு!” என்று கடிந்தாள் தாய்.