பக்கம்:பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



1. வ. உ. சி. வாழ்க

ஹாலிவுட் நட்சத்திரம் ஜிப்பி சென்னைக்கு விஜயம் செய்திருந்ததல்லவா? அதைப் பற்றி அன்றையத் தினசரியில் செய்தி வெளியாகியிருந்தது. அந்த மனிதக் குரங்கை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டேயிருந்தான் பூபாலன். அவனுக்கு வாயெல்லாம் பல்லாகி விட்டது. அவன் பாரதச் சிறுவன் அல்லவா?... .

சிரிப்பு அடங்கியது. அப்பொழுது அவனுடைய சிறுகுடலைப் பெருங்குடல் கவ்வியது. ஓடினான்.

மாம்பலம், ஜானகிராமப் பிள்ளைத் தெரு, வீட்டு நம்பர் இரண்டு.

‘அம்மா, பசிக்குதே, அம்மா! ஏம்மா, இப்படிப் பசிக்குது?’ என்று கேட்டான் பூபாலன்.