பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதத்தில் செழித்த வைணவம்

109

பிரமத்தை நாம் நிறுவுதல் இயலாது. பொருள்கள் இடையே அமையும் ஒற்றுமையையே அடிப்படையாகக் கருதல் அளவை கொள்கிறது. எடுத்துக்காட்டு:


எல்லா மனிதர்களும் இறப்பார்கள்.
இராமன், மனிதன் ஆவான்,
ஆதனான், இராமனும் இறப்பான்.

இவ்வழக்குரையில் இராமன் மற்றைய மனிதர்களை ஒத்தவன் எனக் கொள்ளப்பெறுகிறான். ஆதலால், நாம் மற்றவர்களைப் போல இராமனும் இறப்பான் எனக் கொள்கிறோம். பிரமம், தனித்த நிலையுடையது. ஒப்பு இல்லது. ஆதலால் ஒப்பற்ற பிரமத்திற்கு ஒப்புக்கான முடியாததால் கருதல் அளவை, இங்குப் பயன்படாது.

மனிதனின் அறிவாற்றல் எல்லைக்குட்பட்டது.

மனிதனின் அறிவாற்றல் எல்லைக்குட்பட்டது என்பதனை நிம்பார்க்கர் வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறார். உலகப் பொருள்களை, அநுபவ நிலையில், அமைவனவற்றை யாரும் அளவை முறையிலே கருதுதல் இயலும் உலகு கடந்ததை அனுபவம் கடந்ததை அறிவிற்கு அப்பாற்பட்டதாகக் கொள்ளவேண்டும். இந்த,அறிவார் உண்மைகளை அறிவதற்கு, உலகு கடந்த உண்மைகளை உணர்வதற்கு வேதமே நமக்கு வழிகாட்டியாகும்.

வேதம், எனப்படுவது யாது? வேதம் மறை நூல் எனவும் கூறப்படும். முதிர்ந்த சிந்தனையும், தொடர்ந்த எண்ணமும் துறவோரும் அறிவோரும் பெற்ற ஊக்கமும் உணர்வும் இவையாவும் மறை நூல்களாகத் தோன்றத் துணை நிற்பன. இம்மறை நூல்களை அருளிய இயற்கை ஆற்றல் மிகுந்த அறிவோர்க்கு எந்நாலும் மறைப்புற்ற நூல் ஆகாது. மன்ற நூல் அருளியோர் சிந்தனை. நம்முடைய சிந்தனையை விடத் தூய்மைமிக்கது. அறிவு நலம் சார்ந்தது.