பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128 த கோவேந்தன்

இல்லை. ஆன்மாக்கள் பிரமத்திடம் இருந்தே தோன்றுகின்றன.

    பிரமம், நுகர்வோன் ஆவான். இறைவனுக்குப் பொருந்தும் குணங்கள் யாவும் இயற்கையானவையே. இவை இயல்பாகவே இறைவனிடத்துக் குணங்களாக அமைகின்றன. குணங்கள், பிரமத்தின் வேறு அல்ல. குணங்கள் பிரமத்திடத்து அத்துவித உறவிலே அமையக் காண்கிறோம். சுருங்கக் கூறின். பிரமம் எல்லாக் குணங்களையும் உடையதாகி இயற்கைக்கும் அறிவிற்கும் பிறப்பிடமாகி வேறுபாடுகள் அனைத்தும், தன்னிடத்து மறைகின்ற நிலையிலே விளங்குகிறது.
    இக்கருத்துக்கள், ஜெர்மானிய மெய்ப்பொருளியல் அறிஞர் ஷெல்லிங் (Schelling) கருத்துக்களோடு ஒப்பு நோக்கத்தக்கன. பிரபஞ்சமும், ஆன்மாக்களும் இம்மையில் பிரமத்தோடு ஒன்றிய நிலையிலே உள்ளன. ஆதலால் வல்லபரது கருத்து முறை சங்கரது மாயா வாதத்திற்கு எதிராகச் சுத்தாத் வைதம் எனப் பேசப் பெறுகிறது.
    வல்லபரது கருத்துமுறை, தூயகலப்பற்ற அத்து விதத்தை வற்புறுத்துகிறது என்பது இங்குக் குறிக்கத் தக்கது. பிரமம், முற்றிலும் தூயனாக விளங்குகிறான். மாயை போன்றவற்றால், எவ்விதத்திலும் தொடக்குறாத நிலையில் விளங்குகிறான். காரணமும், காரியமும், பிரமும், பிரபஞ்சமும், தூயனவாக ஒன்றாக விளங்கு தலால்வல்லபரது கருத்துமுறைதூயன ஆதலால்,பிரமமே முதற்காரணமாகவும், நிமித்த காரணமாகவும் விளங்கு வதால் தூய அத்துவிதமாகப் பேசப்பெறுகிறது.
    வேதநூல்கள் யாவும் பிர்மம் என்பதையே பல்வேறு நிலைகளில் விவரிக்கிறது. வேதத்தில் முதற் பகுதி பிரம்த்தின் குணங்கள் வடிவங்களாகிய வேள்விகளை விவரித்துக் கூறுகிறது. வேததத்தின் பிற்பகுதி, ஞானத் தைச் கூறுகிறது. பூர்வகாண்டம் கருமங்களை வேள்வி களை எனக்கொண்டு, விவரிக்கிறது.