பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதத்தில் செழித்த வைணவம் 133

உண்மைப்பொருள்களுக்கு உரியன அல்ல. அவற்றின்மீது புகுத்திக் காணப்பெறுவதால் மயக்குகின்ற அறியாமை காரணமாகப் பொருள்களுக்கு இல்லாத பண்புகள் ஏற்றப்பெறுகின்றன. கற்பனையில் எழும் பொருள்கள் விஷயாதம் எனப்படும். உண்மைப்பொருள் பிரமத்தின் வெளிப்பாடு ஆதலால் விஷயம் எனப்படும்.

    விஷயாதம் இருவகையின: (1) பொருள்களின் உண்மை இயல்பை மறைப்பது. (2) பிழைப்படுகின்ற தவறான கருத்துகளுக்குக் காரணமாவது. பிரமத்தை அறிந்தோர் பிரபஞ்சத்தில் உள்ள பொருள்களைப் பிரம் மாகவே காண்பர்.இவ்வாறு, பிரமமாகவே காண்பதில் பிழைகள் நேருவதற்கு இல்லை. பிழைப்படும் அறிவு ஏற்படாது. மற்றையோர், கற்பனைப் பொருள்களையே காண்பர். இவ்வாறு, இல்பொருளைக் கற்பித்துக் காணு பவர்கள் கொள்ளும் காட்சி, அறிவிற்கு அயலானதாகும் (அந்நியாகியாதி).
    வேத நூல்களும் காணப்பெறும் பல பகுதிகள், பிரபஞ்சத்தை மாயை என விவரிக்கின்றன.இப்பகுதிகள் தனி ஒருவனது பிழைப்படுகின்ற அனுபவ உலகையே குறிப்பன எனக்கொளல் வேண்டும். உண்மைப் பிரபஞ் சத்தினைக் குறிப்பன ஆகா. உண்மைப் பிரபஞ்சம் பிரமத்தின் வெளிப்பாடு ஆகும்.
    உண்மைப் பிரபஞ்சத்தைச் கம்சாரமாகிய பொய்த் தோற்றம் உடைய உலகினின்று பிரித்து வல்லபர் உணர்த்துகிறார். இப்பாகுபாடு நுண்ணியதாகும். சம்சாரம் சுயநலமாகும். யான் எனும் உணர்வும், எனது எனும் உணர்வும் சம்சாரத்தில் அடங்கும். இவ்விரு உணர்வும் பிரமத்தைப் பற்றிய ஞானத்தை ஆன்மா அடைகின்ற போது அழியும். வித்தை அவித்தை ஆகிய இரு ஆற்றல் களும் இறைவனது மாயையாகிய சக்தியால் தோன்றுவன. இவ்விரு ஆற்றல்களும் ஆன்மாவைக் குறித்தன. ஆன்மாவுக்கு அயலாக இவ்வாற்றல்களுக்குப் பயன்