பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136 த.கோவேந்தன் இவ்வறுவகைத் தெய்வீக குணங்கள் மறைவதற்குக் காரணங்கள் முறையே வருமாறு: (1) சார்பு, (2) பலவகைத் துன்பங்களால் தொடக்குறுதல், (3) தாழ்வு மனப்பான்மை, (4) பிறப்பினால் எழுகின்ற பெருந்துன்பங்கள், (5) அகந்தை (6) பொய்யறிவு, உலகப் பொருள்களிடத்துப் பற்று. மேலே குறித்த முதல் நான்கு தெய்வீகக் குணங்கள் மறைகின்றபோது ஆன்மா பந்தத்திற்கு உட்படுகின்றது. மற்றைய தெய்வீக குணங்களால் பிழைப்படும் அறிவு ஏற்படுகிறது. ஆன்மா,அணுத்தன்மையுடையது. ஒடுங்கியுள்ள இன்பம் வெளிப்படுகின்றபோது, ஆன்மா பிரமம் போல் முற்றறிவு பெறுகின்றதைக் குறிக்கின்றன. இன்பம் முற்றிலும் வெளிப்படுகின்றபொழுது ஆன்மா முற்றறிவு உடையதாகிறது. வேத நூல்களிலே காணுகின்ற பகுதிகள் ஆன்மாக்கள் முற்றறிவை உடைய இறைவனைப் போன்று விளங்குகின்றன என்று கூறுகின்றன. ஆன்மாவினது இன்பம் முழுமையுற வெளிப்படுகின்றபோது எண்ணி றந்த உலகுகள் அவ்வான்மாவிடத்துத் தோன்றுகின்றன. இவ்வுலகுகட்கு எல்லையில்லை. ஆன்மா, பிரமத்தோடு உண்மையில் ஒன்றிய நிலையிலேயே உள்ளது. இப்பிரபஞ்சம் பல வேறுபாடுகளால் நிறைந்தது. ஆன்மாக்கள், வெவ்வேறு நிலைகளில் உள்ளன. இப்பிரபஞ்சத்தில் சிலர் மகிழ்ச்சியாகவும், சிலர் மகிழ்ச்சி குறைந்தவர்களாகவும் காணப்பெறுகின்றனர்.இவ்வாறு வேற்றுமைகள் நிறைந்ததாக இப்பிரபஞ்சத்தை இறைவன் படைத்திருந்தபோதிலும் இறைவன் மீது எவ்விதக் குற்றத்தையும் கூறுவதற்கு இல்லை. ஓரவஞ்சகம், கொடுமை ஆகிய குற்றங்களை உடையவர் என, இறைவனைக் கூறுவதற்கு இல்லை. இவ்வேறுபாடுகள் இப்பிரபஞ்சத்தின் நிலை, ஆன்மாக்களது நிலை, பிரபஞ்சத்தின் முன்னையகாலச் சுழற்சிகள்,