பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதத்தில் செழித்த வைணவம்

                          137

ஆன்மாக்களது செயல் நிலைகள் ஆகியவற்றைப் பொறுத்தன, இறவனது சுய படைப்பாகும். (ஆத்ம சிருஷ்டி), இறைவன் தன்னுடைய ஆன்மாவினின்றே இப்பிரபஞ்சத்தைப் படைக்கிறார், ஆதலால் எவ்விதக் கண்டனத்திற்கும் இடம் இல்லை. விடுதலைக்கு உரிய வழிகள்: இவ்வுலகிலே காணப்பெறுகின்ற உணர்ச்சி நிலை வேறுபாடுகள், இறைவனை அணுகுகின்ற வகையிலே எழுகின்ற வேறுபாடுகள் ஆகும். வேத நூல்கள் மூவகை நெறிகளைக் குறிக்கின்றன. (1) கருமமார்க்கம் (2) ஞான மார்க்கம் (3) பக்தி மார்க்கம். இவை மூன்றும் விடுதலைக்குரிய வழிகளாகும். இவ்வழிகளுள், எவற்றையேனும் ஒன்றை வலியுறத்தியதனால் வேதாந்தக் கருத்துமுறைகளுள் வேறுபாடுகள் எழுந்தன. ஆன்மாக்களை மூவகையினராக இறங்கு வரிசையில், (1) புஷ்டி (2)மாரியாதம் (3) பிரவாகம் என வகுக்கின்றனர். குறிப்பின்றித் திரிகின்ற ஆன்மாக்கள் பிரபஞ்சத்திலே ஆழ்ந்து இறைவனை நினையாது வாழ்கின்றவர்கள், பிரவாக வகுப்பைச் சேர்ந்தவர்கள், இங்கு பிரவாகம் என்று குறிக்க ப்பெறுவது உலகப் போக்கிலேவாழ்கிறவர்கள் என்பதாகும்.வேதநூல்களில் பயிற்சி உடையார் இறைவனது உண்மை இயல்பினை அறிந்து இறைவனை வழிபடுவோர் ஆவார். இவர்கள் வேத நூல்களிலே காணப்பெறுகின்ற சட்டங்கள் விதித்துள்ள வழிகளிலே ஒழுகுகிறவர்கள் ஆவார்கள். இவர்கள் மாரியாதார் என்ற இரண்டாவது வகுப்பைச் சேர்ந்தவர்கள்.இறைவனால் தேர்ந்து எடுக்கப்பட்ட சிலர் இறைவனிடத்தில் தாம் கொள்ளும் எல்லையில்லாத அன்பின் பெருக்கினாலே மிகுந்த ஈடுபாட்டோடு வழிபடுகின்றனர்.இவ்வகையினரை புஷ்டி ஆன்மாக்கள் எனக் கருதுகின்றார். இங்குப் புஷ்டி எனக் கூறப்படுவது இறைவன் அருளைப் பெற்றவர்கள் என்பதாகும். இறை