பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138 த. கோவேந்தன் இறைவன் அருளை என்றென்றும் துய்த்தற்குரிய நிலையில் அருள் நலம் வாய்க்கப் பெற்றவர் என்பது பொருள். இவ்வருள் நலத்தால் உயரிய இலட்சியத்தை அடைதற்கு அவர்கள் உரியராகின்றனர். வாழ்விலே விரும்பத்தகாத முறையில் வாழ்வோர் இப்பிரபஞ்சத்தின் சுழற்சிகட்கு உட்பட்டுத் துன்புறுவோர் ஆவர். தாம் விரும்புவனவற்றை அடைதற்பொருட்டு வேள்விகளை மேற்கொள்கின்றவர்கள், அவ்வேள்விகட்கு உரிய பரிசுகளைப் பெற்று மறுமையிலே இன்புறுவர். இவர்கள் துறக்கவுலகிற்குச் செல்லுகின்ற நெறி, முன்னையோர் சென்ற நெறியாகும் புஷ்டி ஆன்மாக்கள் (பிதிரியான) அவரவர்கள் மேற்கொண்ட வேள்விகட்கு உரிய பயன்களைத் துறக்கவுலகில் நுகர்ந்த பின்னர் மீண்டும் இவ்வுலகில் பிறப்பர். இவ்வுலகிலே பிறப்பு நிகழ்வது எப்போது எனில் வேள்விக்கு உரிய பரிசுகளைத் துய்த்தபின்னரேயாகும். ஒருவன் பற்றின்றி வேத வேள்விகளைப் புரிவானேயானால், ஆன்ம சுகத்தை அவன் நுகர்வான். இவ்வாழ்வு முடிந்த பின்னர் புதிய உடல் பெறுவான். இவன் பெறுகின்ற புதிய உடலின் அமைப்பு ஐவகைத் தீ ஓம்புதல் பற்றிய கொள்கையைப் பொறுத்ததாகும். அப்புதிய பிறப்பிலே இறைவனைப் பற்றிய ஞானத்தைப் பெறுகிறான்.இவன் பெறுகின்ற ஞானம் இறைவனோடு முடிவிலே ஒன்றுகின்ற தகுதியை இவனுக்குத் தருகிறது. இத்தகுதியைப் பெற்ற பின்னர், இவன் கடவுள் வழியில் வெவ்வேறு நிலைகளைக் கடந்து செல்லுகின்றான். வேத வேள்விகளில் இறைவன், வேள்விச் சடங்குகளின் வடிவத்தில் விளங்குகிறான். (அக்னி ஹோத்திரம் ;-தர்ம,பூர்ண-மாச,பசு-சாதூர்,மாஸ்ய-சோம).வேள்வி களைப் புரிதலாலே இறைவனது சடங்காற்றலை கிரியா சக்தி வழிபடுகின்றவர்களும் அதனுடன் இறைவனைப்