பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதத்தில் செழித்த வைணவம் 147 வல்லபரது பேரூலகு வல்லபர் சுத்தாத்வைத மெய்ப்பொருளியலைப் போதித்து உள்ளார். புஷ்டி மார்க்கத்தை வற்புறுத்துகின்ற சமயம் வேத நூல்களை அடிப்படையாகக் கொண்ட தாகும். தீராத எந்தச் சிக்கலுக்கும் தீர்ப்புக் கூறுவது, கருதியே என வல்லபர் கொண்டார். பிரமம், பல குணங்களை உடையது என்றும், பிரமம் பிரபஞ்சமாக மாறுகின்றதென்றும், பிரபஞ்சம் உண்மையானதென்றும், கரும மார்க்கமும் ஞான மார்க்கமும் ஒன்றுதல் வேண்டும் என்றும், வல்லபர் கூறுவது எல்லாம் சங்கரருக்கு முன்னாலேயே தெரிந்தவையேயாகும். பக்தி, பரபக்தி, அருள் போன்ற கருத்துகளும் வல்லபர் க்கு முன்னாலேயே வழக்கில் இருந்தன. ஆதலால் இந்திய மெய்ப் பொருள் இயலுக்கு வல்லபர் தந்த பங்கு யாது? இருமையற்ற கொள்கை:

   இன்பம் ரஸம் ஆகியவற்றால் நிறைந்துள்ள இறைவன் என்னும் கருத்தமைவு: மாறுபடும் குணங்களும், பிரமத்திடத்து ஒருங்கே அமைதல் அக்ஷரப் பிரமத்தைப் பற்றிய கருத்து பிரமத்தின் படைப்புக் கொள்கை, எவ்வித மாற்றமும் உறாது பிரமம் பிரபஞ்சமாக மாறுதல்; இறைவனிடத்துக் தன்னை முற்றிலும் ஒப்படைத்துக் கொள்ளுதல், அருளை வற்புறுத்தல், உணர்ச்சியும் அழகும் கொண்ட வழிபாட்டு வடிவம் ஆகிய இவையாவும் வல்லபரது போதனையுள் காணப் பெறும் சிறந்த கூறுகளாகும்.
     சங்கரரை அவரது மாயக்கொள்ளைக்காக வல்லபர் கண்டனம் செய்கிறார். பாஸ்கரரை அவரது உபாதிக் கொள்கைக்காகக் கண்டிக்கிறார். இராமானுஜரது முடிவில் கொண்ட மும்மைக் கொள்கைக்காகத் கண்டிக்கிறார்.நிம்பார்க்கரது துவைத வற்புறுத்தலையும், மாத்வர் கலப்பற்ற துவைதத்தை ஆதரிப்பதையும் சாக்தர்களின் சக்தி, பிரபஞ்ச நிமித்த காரணம் எனும் கொள்கையையும் கண்டிக்கின்றார்.