பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146 த. கோவேந்தன் யாவரும்தேசம்,ஜாதி போன்ற வேறுபாடுகள் கடந்த நிலையில் இறைவனை, பிரபக்தி நெறியால் அடையலாம். இறைவனது ஆணைவழி நிற்றல் இங்கு பிரபக்தியால் வற்புறுத்தப்பெறுகிறது. இறைவனது, விருப்பப்படி ஒழுகுதன்லை இலட்சியமாகக் கொண்டு தன்னையே இறை வனிடத்து ஒப்புவித்து வாழ்வு முழுமையும் வழிபாடாக அமைத்துக் கொள்கின்றனர். இவர்கள் கேட்பதும் இசைப்பதும் பாகவதமே.

  கோகுலத்தில் கிருஷ்ணனது ராஸ லீலை என்றென்றும் உள்ளதாகும். இருக்கு வேதத்தில் இந்த லீலையின் தோற்றத்தைக் கண்டுள்ளனர்:'சுகர்’ என்பவர் காலம் தொடங்கி இந்நாள்வரை ராஸ லீலையாகிய கருத்தமைவைப் பல்வேறு வகைகளில் விளக்கியுள்ளனர். வல்லபர் ராஸ லீலைக்குச் சொற்பொருளும், உட் பொருளும் தந்துள்ளார். சொற்பொருளாகக் கொள்ளுகின்றபோது, ராஸ. லீலையில் எவ்விதத் புலத் தொடர்பும் இல்லை என்பதனை வற்புறுத்த விரும்புகிறார்.
    இறைவனும், அவனது செயல்களும் பற்று இன்றி நிகழ்வன.ராஸ லீலையைப் பற்றி நினைத்தல் ஒருவனைத் தூய்மையுறச் செய்யும். இறைவனிடத்து அன்பு பெறுகத் துணை நிற்பது ராஸ லீலையைப் பற்றிய சிந்தனையே. ராஸ லீலையின் உட்பொருளை அறியுமிடத்துப் பிறழ உணர்வதற்கு இடமேயில்லை.   
வல்லபரத கருத்துப்படி கோபிகள்.வேதங்கள் ஆகும் அல்லது சுருதிகள் ஆகும். சுருதிகள் என்றும் இறை வனோடு தொடர்பு உடையன. இறைவனே சுருதிகளில் பேசப்பெறும் பொருளாகும். சுருதிகள் இடையறாது இறைவனோடு தொடர்புப் படுத்தப் பெறுவதை ராஸ லீலையாகக் குறிக்கலாம்.