பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதத்தில் செழித்த வைணவம் 151 சூத்திரத்திற்கு உரை கணடவாறு இறைவனுக்கும் எல்லைக்குட்பட்டுள்ள ஆன்மாவிற்கும் உலகுக்கும் என்று முள்ள வேறுபாட்டை மட்டும் வற்புறுத்துவதோடு சைதன்யர் நிற்கவில்லை. அபேதரம் அல்லது என்றுமுள்ள நிலைபெற்ற வேறறுமையிடையே வேற்றுமையின்மை யையும் சைதன்யர் வற்புறுத்துகிறார்.

   இந்த அபேதம் அல்லது வேறுபாட்டில் வேறு பாடின்மை என்பது, அளவை நெறியிலே அறிவிற்கு எளிதில் புரிவதாக அமைய வில்லை. ஆதலால் மாதவர் கூறிய துவைதாவதத்தின் இருமைக் கருத்து முறைக் கொள்கையாக இதைக் கொள்வதற்கு இயலாது. இதை அசிந்தியபேதாபேதம் அல்லது ஒருவகைக் கருத்தியல் ஒருமைக் கொள்கை (Idealistic Monisi)யாகக் கொள்ள வேண்டும். இவ்வாறே இது கருதப் பெறுகிறது. இந்த அசிந்திய பேதாபேதம், இருமைகள் அனைத்தையும் அளவை கடந்த ஒருமையில் அல்லது அளவையால் அறிய இயலாத முழுமையில் ஒன்றுபடுத்துகின்றது.
   வைணவக் கருத்து முறைகள். அனைத்திற்கும் பொதுவான உண்மை பிரபஞ்ச உண்மை, பிரபஞ்ச உள்பொருள் எனக் கொள்வதாகும். மாயா வாதம், அனைத்து வைணவக் கருத்து முறைகளாலும் மறுக்கம் பெறுகிறது. சங்கரர் கருதிய ஜகத்மித்யத்வம் அல்லது பிரபஞ்சத்தின் பொய்மையை மறுத்தல் அனைத்து வைணவக் கொள்கைக்கட்கும் உடன்பாடாகும். இவ்வாறு பிரபஞ்ச உண்மையை ஏற்பதும் மாயா வாதத்தை மறுப்பதும், வைணவப் பிரிவுகளுக்கேயன்றிச் சைவ, சாகத கருத்து முறைகட்கும் உடன்பாடேயாகும்.
   ஆகமங்களின் தலைமையினை ஏற்கின்ற அனைத்துப் பிரிவினரும்,வேத நூல்களுக்குத் தருகின்ற சிறப்பையே ஆகமங்கட்குத் தருகின்றனர். சைதன்யர், வைணவர் என்னும் முறையில் இவற்றிற்கு மாறுபட்டவர்