பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதத்தில் செழித்த வைணவம் 175

கூறவொண்ணாதது ஆகும. ஜீவ சக்தியும் மாயா சக்தியும் இறைவனின் சொரூப சகதியின் கூறுகளாகும்.இறைவன் இவ்விரு சக்திகட்கு அயலாகப் பிறிதொரு ஆற்றல் உடையவன் ஆகிறான இவவாற்றல் ஏனைய இரு ஆற்றல களையும் கடந்ததாகும; நிறைவுடையதாகும். மாற்றம் இல்லாததாகும.

    இறைவன் பலவேறு ஆற்றல்களைச் செலுத்தினாலும மாறறம் உறாதவன. இறைவன் பல்வேறு ஆறறல்களையும் செயல்படுத்தினாலும் தான் அவ்வாற்றல் களினுடே கலந்தும், கடந்தும், தன்னை வெளிப்படுத்திக் கொள்கின்றான். வேறுபடாது வேற்றுமை அறற இடத்து வேற்றுமையாக - சிந்தனை கடந்த ஒன்றாக வெளிப்படுத்திக் கொள்கிறான். இறைவனது ஆற்றல்கள் சித் சக்தி, ஜீவ சக்தி, மாயா சக்தி எனும் மூன்றுமதனித்தனியே செயல்படும்போதும் ஒன்றோடொன்று உறவு கொள்ளுகின்ற நிலையில் செயல்படும்போதும், சிந்தனை கடந்தே விளங்குகிறது.
    இதனால் சைதன்யரைப் பின்பற்றுவோர், தமது கருத்து நிலையினை அசிந்திய பேதாபேதம், சிந்தனை கடந்து பேதாபேத உறவு எனறு விளக்குகின்றனர். சைத்ன்யர்களது அசிந்திய பேதாபேதத்தைபிரமவிவர்த்த வாதத்தினின்றும், பிரம பரிணாம வாதத்தினின்றும் பிரித்து அறிய வேண்டும். விவர்த்த வாதம், பிரபஞ்சத்தை பொய்த்தோற்றம் என, அத்தியாசம் எனக்கொள்கிறது. இத்தோற்றம் என்றும் உள்ள பிரமமாகிய முழுமுதற் பொருளிடத்துத் தோன்றுகிறது.
    பிரபஞ்சம் பிரமததின பொய்த்தோற்றம் ஆகும். பிரமம்,பிரபஞ்சமாகத்தோன்றினும் நிர்விகாரியாவான். சைதன்யரைப் பின் பற்றுவோர் பிரபஞ்சத்தை உண்மை எனக் கொள்கின் றனர். ஜீவன் அல்லது சிற்றுயிரைப் பிரபஞ்சம் தனக்கும பரம்பொருளுக்கும் உள்ள