பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 உண்மையைப் பற்றிய

                                                                             கொள்கை
    விசிஷ்டாத்வைத்தில்உண்மைப்பற்றியகொள்கை, உள்ளது எதுவோ அதுவே என்கிறது. பாழாக வெற்று நிலையாக ஏதும் இல்லை. பரம்பொருள் என்பது பிரம்மயமாகும்; பிரமமும் மாயையையும் மாறுபடுகின்ற நிலை அன்று. பிரமம், உள்பொருள். பிரமத்தில் இவ்வுலகு நிலைபெறுவதால் இவ்வுலகும் உள்பொருளேயாகும். உள்பொருளும் பண்பும் ஒன்றேயாகும். எந்தப் பொருள் மேலும் மேலும் உண்மை நிலை அடைகிறதோ அந்த அளவுக்கு, அது உள்ளதாகும்.
    'அசித் அல்லது ஆன்மா அல்லாதது, மற்றங்கட்கு உட்பட்ட வண்ணம் இருக்கின்றது. இவ்வாறு இடை யாறாது மாற்றத்திற்கு உட்படுவதால் நிலையற்றது எனப்படும். சித் அல்லது ஆன்மா என்றும் உள்ள பொருளாகும். ஆன்மா என்றும் உள்ளதாயினும் அதனின் உணர்வு சுருங்குகிறது விரிகிறது.இச்சுருக்கமும், விரிவும் கருமத்திற்கு ஏற்ப அமையும். ஆன்மா, நிலைத்து உள்ளது. உண்மையானது (சத்தியம்), பிரமம் என்றும் உள்ளது. தூயது, நிறை உள்ளது. பரம்பொருளாவது, உள்பொருள் அனைத்திற்கும் மேலான உண்மை (சத்தியஸ்ய சத்தியம்), உடையது உண்மை, நிதர்சனமாகும். ஒரு பொருள் எந்த அளவிற்கு நிதர்சனமோ அந்த அள்வுக்கு உண்மை உடையதாகும் உண்மை, விரிவு அடைந்து உள்ளது ஆகி,