பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதத்தில் செழித்த வைணவம் 19

கருத்தினைத் தெளிவைக்கும். ஒரு பொருள் மற்றொரு பொருளின் உடலாகலாம். அல்லது பண்பும் ஆகலாம். ஒரு சொல் சரீரத்தைக் குறிப்பதாகலாம். இன்னும் ஒரு எடுத்துக் காட்டு:'நீ என்பது சரீரத்தைக் குறிக்கும். இங்கு சரீரமாவது சரீரத்தையுடைய ஜீவன் ஆகும். அது என்பது பிரமத்தைக் குறிக்கும். 'பிரமம்' என்பது ஜீவனுள் விளங்கும் பரமாத்மா ஆகும். ஆகவே உயர்ந்த வேதாந்தப் பொருளில் அனைத்துச் சொற்களும் பொருள் அல்லது ஆள் அல்லது தெய்வம் ஆகியவற்றுள் எவற்றையேனும் குறிப்பதோடு பிரமத்தை அனைத்து ஆன்மாவிற்கும் முதலாக, மூலமாக ஆதாரமாக கொள்ளலாம்.