பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18 த கோவேந்தன் மாகும். பரம்பொருளின் அல்லது பிரமத்தின் அடைமொழியாக ஆன்மா அமைகிறது. அளவை நெறியில் ஆன்மா பிரமத்தின் பிரகாரமாக அமைகிறது. அறநெறியில் ஆன்மா தனித்தன்மை பொருந்திய மொண்டாக’ (Monad) விளங்குகிறது.ஒவ்வொரு ஆன்மாவும் தனக்கென ஒரு தனித்தன்மையினை உடையதாகும். ஆன்மா, பரம்பொருளின் உறுப்பாகவும், உயிர்ப் பொருளாகவும், ஒருங்கே உள்ளது.

    மேற்குறித்த உண்மையினை இலக்கண விதிகளும் வெளிப்படுத்துகின்றன. இலக்கணத்தில் 'சாமானாதி கரண்யம் என்பது ஒரே இனத்தைச் சேர்ந்தநிலையினைக் குறிப்பது ஆகும். மீமாம்சகர்கள் பண்பைக் குறித்துத் தந்துள்ள விளக்கமும் இராமானுஜர் கொள்கையில் காணும் சாமானாதிகரண்யத்தை ஒத்தாகும்.
    விசிஷ்டாத் வைதத்தில் காணப்பெறும் சாமானாதி கரண்யத்தின்படி ஒருவாக்கியத்தில் அமையும் சொற்கள் வெவ்வெறு பொருளுடையனவாயினும் ஒரு பொருளையே குறிக்கும். எடுத்துக்காட்டாக இவன் தேவதத்தன் ஆவான். தேவதத்தன் யார் என்பதை, இந்த வாக்கியம் குறிக்கிறது, இவ்வாக்கியத்துள் அமையும் சொற்கள் அனைத்தும் ஒருங்கே தேவதத்தனை இணைப்புக் கொள்கையால் குறிக்கக் காண்கிறோம். கருத்திலே பிரிந்து ஒருமைகாண வேண்டுவது இல்லை.
    மீமாம்சகர்கள் கருத்துப்படி, சொற்கள் பெரும் பிரிவையும், குணத்தையும் குறிப்பன. மேலும், சொற்கள், தனி ஒருவனையும், பொருளையும் முறையே குறிப்பனவாகும். எடுத்துக்காட்டாக இது ஒருபகவாகும்.இதில் தனி ஒரு பசு குறிக்கப்பெறுகிறது. பசுத்தன்மையை உடைய பொருள் ஒன்றும் குறிக்கப் பெறுகிறது. (வியக்தி, குனி). உபநிடத மூல பாடத்தில் காணப்பெறும் மஹாவாக்கியம் ஆகிய அதுநீயே’ என்பதிலும் மீமாம்சகர்கள் கூறும்