பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதத்தில் செழித்த வைணவம் 17

என்பதனோடு உணர்வோன், உணரப்படும்பொருள் என்ற உறவிலே, அமைகிற பொழுது அறிவு எழுகிறது. ஒவ்வொரு தீர்ப்பின் அடிநிலைப்பொருளாக அமைவது, உள்ளத்தின் முழுமையுயாகும். இந்நிலையில் ஆன்மா பரமாத்மனாக்கும் அனைத்துச் சிந்தனையாளர்களுள் ளும், பொருள்களுகுள்ளும் ஒளிர்வதனாலும் இவை யனைத்தையும் கடந்த நிலையில் இருப்பது பரமாத்மா.

    பரம் பொருள் குறித்து அடைமொழிகேற்ற கொள்கை, பிரதக்சித்த விசேஷ கொள்கை எனப்படும். இக்கொள்கை தீர்ப்பின் கருத்தை உண்மை நிலையில் (Ontological) உள்ளவாறும், அளவை நிலையில் (Logical) உள்ளவாறும் வெளிப்படுத்தும். “மனிதன், அறிவு உடையவன்” என்னும் உரையில் பயனிலையாக உள்ள அறிவுடைமை என்பது எழுவாயினின்று பிரிக்க வொணாத அல்லது முக்கியமான பண்பாகும் எழுவாய் ஆகிய பொருளோடு தொடர்புபடுத்துவது மட்டும் அன்று பண்பு, பொருளில் தங்குகிறது; பொருட்தன்மையில் பங்குகொள்கிறது.
    பண்பு பொருளினின்று வேறுபடினும் பொருளின் தன்மையில் பங்குகொள்கிறது. ஆன்மா அறிவுகொண்டு சிந்தனையை உருவாக்குகிறது. ஆன்மாவிற்கு அறிவு பிறவுறாத பண்பாகும்.அளவை, (பிரகாரம்) உள்ளத்தின், இயலில் வேர் கொண்டுள்ளது. ஒவ்வொரு உரையும் உள்பொருளை எழுவாயாகக் கொண்டுள்ளது. அளவை நெறியில் அறிவோனாக ஆன்மா அமைகிறது. (சித்) இவ்வான்மாவிற்கு அறிவு அல்லது உணர்வு பண் பாகிறது.சைதன்யம்,உள்பொருள்குறித்தஇயலில் பிரமம், அறியும் ஆன்மாவிற்கு, ஆன்மாவாக அல்லது பரம் பொருளாக அமைகிறது (பிரகாரின்).

ஞனம் என்பது பண்பும் பண்புப்பொருளும் ஆவது போல..ஆன்மாவும் (சித்) பண்பும் பண்புடைப் பொருளு