பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதத்தில் செழித்த வைணவம் 25 சங்கரரது வேதாந்தத்தில் பிரமத்தைக் கட்டுப்படுத்து வனவாகக் கருதுவது மித்தை என்று கூறிக் கட்டுப்பாடுகள் 'மித்தி யோபாதிகள்’ என்று கூறப்பெற்றன. ‘பாஸ்கரரது பேதாபேதத்துள் உபாதிகள் உண்மை எனவும் கட்டுபடுத்துவன எனவும் கருதப்பெற்றன. 'யாதவரது வேதாந்தத்தில் பரிணாமவாதம் அல்லது 'மாற்றக் கொள்கை காணப்பெறுகிறது. ‘நிம்பார்க்கர்’ என்பவர். இருமையையும் ஒருமையையும் துவைதத்தையும், அத்வைதத்தையும் ஒருங்கே துவைதாத்வைதமாக வழங்குகிறார்.மேற்குறித்தவேதாந்த சிந்தனையாளர்களுக்குப் பிறகு இராமனுஜரது விசிஷ்டாத்வைதக் கொள்கை தோன்றுகின்றது. இராமனுஜரது கருத்துப்படி, எல்லைக்குட்பட்ட ஆன்மாவே இவ்வாழ்வினில் நேருகின்ற பிழைகட்கும் தீமைகட்கும், பொறுப்பு ஏற்கவேண்டும் என்று கூறப்படுகின்றது. சங்கரர், அத்வைதத்தை அனுபவ நெறியிலே வழங்கியவர். வாசுதேவனை அதாவது அனைத்து ஆன்மாவை சங்கரர் போற்றுகின்றார். ஆகவே அனுபவ நெறியில் சங்கரருக்கும் இராமானுஜருக்கும் மிகுந்த வேற்றுமை இல்லை என்றே கூறலாம். "பிளோடினஸ் என்ற மேலை நாட்டு அறிஞருக்கும், இராமானுஜருக்கும் சங்கரருக்கும் இடையே பெரிய வேறுபாடுகள் இல்லை. மேலைநாட்டு மெய்ப்பொருளியலாருள் இராமனுஜரது கருத்தினைப்பெரிதும் ஒத்ததாக, "பிளோடினஸ் என்பவரது கருத்து அமைகிறது. பிளோடினஸ் அனுபூதி நெறியிலே ஒரு பேரின்ப நுகர் வினைத்தனித்த நிலையில் சிறக்கப் போற்றுகின்ற ஒருவராகக் காணப்பெறுகிறார். இராமனுஜர் பிரமத்தைப் பரம்பொருள் என்றே கருதுகிறார். உள்பொருள் முழுமையான நிலையில்