பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 த கோவேந்தன் எனது” என்கிற உணர்ச்சிகளை அடியோடு நீக்கலாம். யான் எனது என்கிற உணர்ச்சிகள் அனுபவ வாழ்விலே தோன்றும் இருவகைப் பெருந்துன்பங்கள் ஆகும். ஒருவனது ச்ெயல் பற்று நீங்கி விருப்பமற்று. விளங்குகிற பொழுது நிஷ்காம கருமமாக அமைகிறது. அவன் கடமையைச் செய்கிறான். அவன் கடமையைச் செய்ய வேண்டும் என்பதற்காகவே கடமையையும் ஆற்றுகிறான். அற உலகில் அறவாழ்வு வாழ்கின்ற ஒருவன் தன்னுடைய அகத்தைக் கட்டுப்படுத்தும் காரணத்தால், அகத்தின் மீது ஆட்சிப்புரிந்து அக உலகிற்குப் பேரரச னாக விளங்குகிறான்.இவ்வாறு அக ஆளுமையுடைவன் குணங்களால் நிலைதடுமாறு அலமருவதில்லை. புறக் காரணங்களால் தான் வரையறை உறுவது இலன் அறஉலகில் தன்னாட்சியுடைய ஒருவன் ஆத்ம சக்தி யினால் அவ்வாட்சி பெற்றதை நினைந்து தன்னைத்தான் காத்துக் கொள்கிறான். ஆன்ம சக்தி வளரப்பெற்ற ஒருவன் நிலைத்த ஞானம் உடையவன் ஸ்த்திதப் பிரக்ஞா. இவன் செயல்நிலைகளினின்று விலகிவிடுதலை அடைந் தவன் அல்லன். ஆனால் செயல்களுக்குள்ளேயே விடு தலைப் பெறுகிறான். அதாவது செயல்களை ஆற்றுகிற பொழுதே செயல்களில் தோய்வுறாமல் பெரு வாழ்வு வாழ்கிறான். கருமயோகம், அல்லது தன்னலமற்ற செயல்வாழ்வு, தன்னுணர்விற்கு வழிகோலுவதாகும். தன்னுணர்வு ஞானயோகத்தால் அடையப் பெறுவதாகும். அறவாழ்வு வாழ்கிறவன் தன்னை அசித் தினின்றும் (ஆன்மா அல்லாதது) பிரித்து அறிய முயல்கிறபொழுது அவன் ஒழுக்க வாழ்வு ஆன்மீக வாழ்வு வாழ்வதற்கு மேலேறுகின் றான். நிஷ்காமகர்மயோகம் என்பது ஒருவன் யாது செய்தல் வேண்டும் என்பதைக் குறிக்கிறது. மேலான நிலையில் சில செயல் நிலைகள் நிஷகாம கருமத்துள் வரையறை செய்யப் பெறுகின்றன. ஆன்மீக நிலையிலே அவன் எவ்வாறு விளங்கவேண்டும் என்பது குறிக்