பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதத்தில் செழித்த வைணவம் 49 இவ்வுடலை உடையது ஜீவன் என்பதுபோல ஜீவனுக்கு உயிராகப் பிரமம் சரீரியாக அமைகின்றது. உடலும், உயிரும் பிரிக்ககொண்ணாதன. ஆயினும், உயிரும், உடலும் ஒன்றல்ல. உடல்வேறு, உயிர்வேறு, பக்தி, அயராஅன்பாக அமைகிற பொழுது இறைவனிடத்துக் கொள்ளும் விருப்பம் தடுக்க முடியாத பேரார்வமாக அமைகிறது. ஆன்மா, இறைவனைக் காணவேண்டும், அடைய வேண்டும் என்று கொள்கின்ற ஆர்வமாகிய பசியைவிட, இறைவன் ஆன்மாவை மீட்க வேண்டும் என்று கொள்கின்ற ஆர்வம் ஆகிய பசி, பெரிதாகும். யாவற்றையும் கடந்து விளங்குகின்ற நிலையான பிரமம், பக்தனோடு ஒன்றுசேர விரும்பம் ஆவலால் மனித உருவத்திலே, அன்பே உருவாக அவதாரம் கொள்கின்றது. பக்தன், இறைவனால் தனது ஆன்மா (மகத்மன்) எனவே கொள்ளப்பெறுகிறான். அன்பு, அன்பின் பொருட்டே, அதாவது பயன் கருதாத அன்பு மேற்கொள்ளப் பெறுகிறது. முக்தியைவிடப் பக்தியே வேண்டப்படுகிறது. பக்தியை அமைப்பது ஒரு பெரிய சாதனைய்ாகும். பக்தி நிலத்தையும், துறக்க உலகையும் இணைக்கும் ஜாகெப் என்பான் அமைத்த ஒரு ஏணி போன்றதாகும். இது பரமபதசோபானம் போன்றது. ஏறுகின்ற வழியில் பல இடர்ப்பாடுகள் நேருவதால் பக்தியாகிய இவ்வேனிப் படிகள் ஏறி மேலே செல்லுதல் அருமைப்பாடு உடையாத கிறது. உபநிடத ஞானத்தைப் பிழிந்து கூறுவது, கீதை பிழை செய்யும் மனித சமுதாயத்தின் மீது பேரிரக்கம் கொண்டு கீதை, பிரபக்தி அல்லது தன்னை முழுமையும் ஒப்பு வித்தல் அர்ப்பணித்தல் என்கிற எளிய பெரிதும் இயல்பான, விடுதலைக்குரிய வழியினைத் தருகிறது. உலகனைத்தையும் மீட்கின்ற சமயமாகிய இது ஒவ்வொரு மனிதனையும், இறைவனது மகனாகவே கொள்கிறது.