பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதத்தில் செழித்த வைணவம் 71 புருஷ சூத்திரத்தில் காணுகின்ற ஒரு பகுதியின் சொற்பொருளைக் கருதுவோம். “தனது ஆன்மாவினை (புருஷன்) இம்முறையில் உணர்கின்றவன் இறவாமை உறுகிறான்.” இப்பகுதியினை நாம் எவ்வாறு பொருள் கொள்வது? ஞானம், இறவாப் புகழ் எய்துவதற்குக் காரணம் என்று பொருள் கொள்ளத் தோன்றும். இவ்வாறு பொருள்கொள்ளின் பிரமத்தை மறுப்பதாகும். பிரமம் யாவற்றிற்கும் அடிப்படையாகும்; உண்மையினை மறுப்பதாகும். தைத்ரீய உபநிடதம் கூறுவது: “எதனினின் றும் இவ்வுயிர்கள் படைக்கப் பெற்றனவோ, அது பிரமம் ஆகும்.'பிரமம் இறவாமையை விளக்கும் அல்லது ஞானம் இறவாமைக்குக் காரணமாக அமையும். ஆதலால் ஞானம் இறவாமைக்குக் காரணம் என்பது பிரமம் யாவற்றிற்கும் காரணம் என்பதை மறுப்பதாகும். பொதுவான மொழி வழக்கை ஒட்டி புருஷ சூத்திரத்திற்கு மேலே நாம் பொருள் கொண்டோம். முழுமையான நோக்குகொண்டு பிரமதுத்திரத்தின் முதற் சூத்திரத்திற்குப் பொருள் கொள்ளுகிறபொழுது மொழி யின் பொது வழக்கினை மறுப்பதற்கு உண்மையான ஞானம் மெய்ப்பொருளியில் ஆய்வினின்றும் பிறக்கிறது என்று கூறப்பெறுகிறது. மெய்ப்பொருள் உணர்வால் தோன்றும் ஞானம் இறைவனது உள்ள உறுதியாகும். ஆதலால் இறவாமை பிரமத்தின் உறுதிப்பாட்டின் விளை வாகும். பிரம சூத்திரம் வழங்குகின்ற ஒரு பொது உண்மை யினை நினைவிலே வைத்து நாம் புருஷ சூத்திரத்தில் காணும் பகுதியினை அறிதல் வேண்டும். ஞானத்தினால் இறவாமை அடைந்தாலும் ஞானம் பிரமத்தின் பேரரு ளால் விளைவது என்பத நன்கு தெரியவருகிறது. புருஷ சூத்திரப் பகுதியின் உண்மைப் பொருளை வரையறை செய்ய மாத்வர் மிகுந்த விழிப்போடு கொள் ளத்தக்க கருத்துக்கள் அனைத்தையும் நன்கு ஆராய்கிறார். தான் கொள்ளுகின்ற பொருளுக்கு மாறான கருத்துகள்