பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86 த. கோவேந்தன் உணர்வு, உடையதானாலும், உணர்வற்றதானாலும், ஒவ்வொரு பொருளும், இயல்பிலே மற்றொன்றனைச் சார்ந்ததாகவே காணப்பெறுகிறது (பரதந்திரம்). சார்புடையது தன்னளவில் விளக்கம் உடையது அன்று; ஆதலால், மற்றவற்றையும் விளக்காது. சார்புடையது, சார்பற்ற ஒன்று உளது என்பதைக் குறித்து நிற்கிறது. உலகப் பொருள்கள் சார்புடையன அல்ல என்று மறுப்பது அல்லது சார்புடையனவாகத் தோன்றுதல் மித்தையாகும். மித்தையையோ அல்லது மறுப்பையோ, சார்பு நிலையில் வைத்துப் பேசுவதாகும். மறுப்போ அல்லது மித்தையோ ஒன்றைச் சார்ந்தே விளங்கு வனவாகும். சார்புடையன அனைத்திற்கும், மித்தையாகத் தோன்றுவன அனைத்திற்கும் மூலமான சார்பற்ற ஒன்று இருத்தல் வேண்டும். சார்புடையது, ஏதேனும் ஒரு பொருளில் உண்மை எனவே கொள்ள வேண்டும். சார்பு அற்றது தோன்றுகின்ற இவ்வுலகத்தில் உண்மையான காரணமாகும். சார்பற்றது எல்லா நிலைகளிலும் தன் உண்மைநிறுவப்பெற்றதாகும். சார்பற்றது, காரியங்களின் மூலமாகவே தனித்துச் சார்பற்று உள்ளதனை தாம் அறிகிறோம். சார்பற்றது என்றென்றும் செயவல்லது. செயல்வல்லார்க்கு எல்லாம் தலைமையாகச் செயல் வலலானாக விளங்குவது. எல்லாம் வல்ல நிலையிலே அனைத்துமாகச் சார்பற்றது விளங்குகிறது. அனைத்துக் கூறுகளையும் கொண்டு விளங்குகிறது. ஒவ்வொரு கூறும் தனித்து விளங்குவது. சார்பற்றது தன்னுள்ளே வேறு பாடுகள் அற்றது. சார்புடையதினின்று பிரித்து அறியக் கூடியது. சார்புமையதைப் பிரித்துக் கூறுவது சார்பற்ற தற்கு எதிராக அமைப்பது ஆகும். சார்பு உள்ளதைச் சார்பற்றதற்கு மறுப்பாகக் கொள்வது சார்புடையதை நிறுவுவதாகும். இவ்வுண்மைகள் அனைத்தையும் வேதம் உணர்ந்தே சார்பற்றதின் ஒருமையையும், சார்புள்ள