பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதத்தில் செழித்த வைணவம் 85 பந்தத்திற்குக் காரணமாகும். இதை உணர்தல் விடுதலை யாகும். கட்டுறுவதும், விடுதலை அடைவதும் ஒங்கே விஷ்ணுவின் வேலைகள் ஆகும். விஷ்ணு விடுதலை அடைதற்கு வழியாகவும் பெறவேண்டிய லட்சியமாகவும் ஒருங்கே விளங்குகிறார். வேதம், கலப்பற்ற மெய்ப் பொருளியலாக இருந்து இந்த அறிவைத் தோற்றுவிக் கின்றது. இவ்வறிவினால் ஒவ்வொரு கருத்தும், சொல் லும், இறைவனைப் பற்றிய உண்மையின் விளக்கமாக அமையப்பார்க்கிறோம். வாழ்வு முழுமையும் இறைவ னுக்குப் படைக்கப் பெறுவதாக அமைகின்றது. 2 பிரமம் (விஷ்ணு) நிறைவுடையதாகக் கருதும் பொழுது அறிகின்ற நிலைக்கு அப்பாற்பட்டதாக விளங்கு கிறது. பிரமம் என்றும் உள்ளது; இன்றியமையாதது; யாவற்றையும் தோற்றுவிப்பது பிரமம் எனக் காண்கின்ற போது அது அறியக்கூடியதாகின்றது. உணர்வுள்ள ஆன்மாக்கள் அல்லது அறிகின்ற ஆற்றல் உடையவர்கள், உணர்வற்ற பொருள்கள் ஆகிய இருவகைக் கூறுகளை உலகு உடையது. தனித்த நிலையில் உள்ள ஆன்மாக்கள் பலவாகும். இவ்வான்மாக்கள் எண்வகை நிலைகளைக் கடந்து செல்கின்றன. எடடு வகை நிலைகளாவன: (1) பிறப்பு (2) இறப்பு (3) அழிவு (4) சார்புள்ள நிலை (5) அறிவு (6) அறியாமை (7) பந்த நிலை (8) விடுதலை. வெவ்வேறு ஆன்மாக்கள், வெவ்வேறு நிலைகளில் இருப்பனவாகும். அனைத்து ஆன்மாக்களும், தம்முள் தொடர்புடையன. எந்த ஆன்மாவும், விடுதலை உணர் வோடு இல்லை. ஆன்மாக்கள் தம்முள் பெரிதும் தொடர்புடையன. ஒவ்வொரு ஆன்மாவும் தனித்த இருப்பு உடையது ஆனாலும், மற்றைய ஆன்மாக்களால் தொடர்புறுதனவே.