பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரைநடை îð? செறிந்து, ஆளுல் அலகசியமாகத் தாங்கி நிற்பவதி போல் காணப்பட்டான். சிறு சிறு செயல்களை நுணுக்கமாக வர்ணிக்கும் மெளனியின் திறமை குறிப்பிடத் தகுந்தது. ஒரு உதாரணம்: காய்த்துப் போன தோளில் உறைபட்டு மிருதுவாகத் துவளும், மூங்கிற் கம்பின் இரு முனைகளிலிருந்து இரண்டு மன் குடங்கன் தொங்கின. கத்திக் கத்திக் கொன் டொருவன், குடங்களிடையே, தோன்றி மறைய நடந்தான். அவன் கண் முன்பு தெரிந்தது வெற்றுக் குடம் போன்றிருந்தது. அது தொங்கிய முனைக்குச் சிறிது தாரத்திலே தான், அக்கம்பைத் தோளில் தாங்கி இருந்தான். மெதுவாக, வெகு சமீபத்திலும் பூமியில் பட்டு அழுத்தலில் அசைந்து அக் குடங்கள் மேலும் கீழும் ஆடின. வெற்றுக் குடமாயினும் சிறிது அதிக ஆட்டத்தில் பூமியில் தட்டி జీ உடைபட்டு, பின் தொங்கும் பிறிதொன்றை மேன் நோக்கிக் கவிழ்த்துப் பாழ்படுத்தும் என்பதை உணர்ந்து அதை வெகு உன்னிப்பாய்ப் பார்த்துச் சென்முன், அதை நெருங்குவதே போன்று மிக விரைவாயும் நடந்தான்; பின்னல், வெகு சமீபமாக தன் காலடியிலும் திட்டுப்படாது தொடர்ந்து வரும் அக் குடம் மதிக்கத்தக்கது. வெகு அருமையானதே!”* இருட்டு, இரவு, கட்சத்திரங்கள், தீபம், சப்தம் முதலியன திரும்பத் திரும்ப இடம் பெற்று, விசேஷத் தன்மைகளோடு இயங்குகின்றன மெளணியின் எழுத்தில். உள்ளே, மங்கலாக தீபம் ஒன்று, இருக்கும் ஏழ்மையைப் பார்க்க வெட்கமும் வருத்தமும் அடைவது போன்று எழுந்தும் விழுந்தும் அழுது கொண்டு எரிந்தது.”