பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உச்சர திக்குப் பின்

2 § அடுக்கு மொழி ஆர்வம் சில சத்தர்ப்பங்களில் நீளம் நீளமான வாக்கிய அமைப்புகளுக்கு இடம் அளித்து விடு வதையும் அவர் எழுத்தில் காணமுடியும்

இலட்சியத்துக்காகவும், அந்த இலட்சியத்தை அடைய உதவும் கருவிபோன்ற கட்சிக்காகவும், சொந்த நலனையும், உயர்பதவியையும் வெறுத்து ஒதுக்கும் வீரமும் கஷ்ட நஷ்டம் ஏற்கும் சகிப்புத் தன்மையும் ஒருவருக்கு ஏற்பட்டுவிட்டால், அவரைத் தலைவராகக் கொண்ட கட்சியும் அதனைச் சார்ந்துள்ள மக்களும் முன்னேற்றமடைய முடியுமென்பது திண்ணம், அரண்மனை மாடியிலே அம்ச துளிகா மஞ்சத்திலே அமர்ந்துள்ள அரிவையை அடைய வேண்டி, ஆங்குச் சென்ற ஆணழகன், அகழின் ஆழத்துக்கோ, அதிலே அலையும் முதலையின் வாய்க்கோ அஞ்சில்ை, எங்ங்ணம் மங்கையைப் பெறமுடியும்! இலட்சிய மெனும் எழிலுடையாளப் பெற்று இன்புற எண்ணுவோரிற் பலர், அகழிக்கு அஞ்சி, புறத்தே நின்று புகைபடு மனமுடன் போரிட்டுக் கொண்டோ, புலம்பியோ கிடப்பர். ஒரு சிலருக்கே, உழவுக்கேற்ற விளைவு எனும் மொழிவழி நடக்கும் அறிவாற்றல் உண்டு. அவர் தமைச் சலிப்பு அண்டாது. சாகசத்துக்கு அவர் பலியாகார், போவியைக் கண்டு ஏமாருர், புல்லரின் புன்மொழி கேட்டுப் புழுங்கார், தாக்கிய வேலினத் தூக்கியெறிந்துவிட்டுப், போர்க்குப் புகின் யார்க்கும் இது நேரல் முறையே என்பது தேரிந்து, புவியுடன் போரிடுகையிலே, கிலி எனும் வலி கொளல் கூடாது என்பதறிந்து, உயிர் கெடும் வரை நெடுவரை போல் நின்று போரிடுவர் வீரர். கட்சிப் பணியும், களத்துப் பணி போன்றே, வீரருக்கு ஏற்றதேயன்றி விலாவிலே விரக்திப் g -ಲ್ಪಟಿಹ, மனதிலே சுயநலமெனும் குளவி கொட்டிடுவோருக்கோ ஏற்றதன்று. சிறு செயல் புரிய மட்டுமே தெரிந்தோர்க்குப் பெருநெறி பிடித்தலளிது.