பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரைநடை 魏旁 ஆலாத்தி எடுத்தனர்; ஆலயப் பூஜாரிக்கு அன்பாபிஷேகம் செய்தனர். ஜோலா, மக்களுக்காக, ஒடுக்கப்பட்ட, நசுக்கப் பட்ட, கொடுமைப்படுத்தப்பட்ட மக்களுக்காக எழுதினர்; எழுதினர் என்ருல், போராடினர் என்றே பொருள். அவருடைய எழுத்து, வீரன் கைவாளை விட வலிவுடையது. உள்ளத்தை உலுக்கக் கூடியது. உலகே எதிர்த்தாலும் அஞ்சாது போரிடும் எழுத்துக்கள். மமதைக் கோட்டை களைத் துரளாக்கும் வெடிகுண்டுகள். நீதி வேண்டும் என்று, ஜோலாவின் பேளு எழுதிற்று. என்ன நேரிட்டது: "நீதி' கிடைத்தது! மந்திரி சபைகளை, அவருடைய பேன முனே மாற்றி அமைத்தது. பல மண்டலங்களிலே, மறக்கப்பட்டுப் போனடிரைபசுக்கு, நண்பர்களைத் திரட்டிற்று. ஒரு பெரும் படை திரட்டிவிட்டார், பேளு மூலம், எங்கோ தீவிலே, ஏக்கத்துடன், 'நான் ஒரு குற்றமும் செய்யவில்லையே’ என்று கதறிக் கொண்டிருந்த டிரைபசுக்கு, வெற்றி, விடுதலை! பதினுேரு ஆண்டுகள் பராரியாகப் பாழும் தீவில் வதை பட்டவனுக்கு, வெற்றி, விடுதலை; ஒரு ஜோலாவின் எழுத் தால்’ (ஏழை பங்காளர் எமிலி ஜோலா) இந்த விதமான ஒரு சக்தி தனது எழுத்துக்கும் வேண்டும் என்று அண்ணு துரையின் உள்ளம் ஆசைப் பட்டிருக்கக் கூடும். எத்தகைய சூழ்நிலையில், எப்படிப் பட்டவர்களுக்காக எழுதுகிருேம் என்பதை நன்கு உணர்ந் திருந்தார் அவர். எனவே என்னென்ன எழுதவேண்டும், எதை எப்படி எழுதவேண்டும் என்றும் அவர் நன்கு அறிந்திருந்தார். அதற்கேற்றபடி அண்ணு துரையின் உரை நடையும் அமைந்தது. மேலே தந்துள்ள உதாரணங்களிலேயே அண்ணு துரை உரைநடையின் தன்மை ஒருவாறு புலனுகும். எளிமை, இனிமை, உணர்ச்சி வேகம், இவற்றுடன் பாட்டுமொழிக்கு: உரிய அடுக்குத் தன்மையும் மோனே அழகும் அவர் நடையிலே கலந்துள்ளன.