பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 பாரதிக்குப் శీణి எனக்குத் தெரியும். ஆல்ை, அவர்களுக்கும் பெரியாருக்கும் உள்ள ஒரு பெரிய வித்தியாசத்தை உணரவேண்டுகிறேன். அவர்கள் படித்த பக்குவ மனம் படைத்த கூட்டத்திலே பேசினர். அவர்களுக்கு எழுதினர். பெரியாரின் பணி, தற்குறிகள் நிரம்பிய தமிழகத்திலே கல்வீச்சு மண்வீச்சுக் இடையே என்பதை அறியவேண்டும். அதிலும் சகலமும் உணர்ந்த சகலகலா வல்லவர்களும் வெறும் சாமியாடிகளைக் கண்டித்துப் பேசவும் சக்தியற்றுக்கிடந்த கால், பெரியாரின் பெருங்காற்றுத் தமிழகத்திலே வீசி, நச்சு மரங்களே வேரோடு கீழே பெயர்த்தெறிந்தது என்பதை உணர வேண்டும்." (வர்ணுஸ்ரமம்) பெரியார் துவக்கி வைத்த பெருங்காற்றை வலிய குறை யாகத் தமிழ் மண்ணிலே பரப்ப திட்டமிட்ட அண்ணு துரை அதற்குத் தேவையான அறிவு வலிமையும் பேச்சுத் திறனும் எழுத்து வன்மையும் பெற்றிருந்தார். அவருடைய பேச்சி லும் எழுத்திலும் உயிரும் உணர்வும், வேகமும் கனன்றன. எழுத்து எப்படி இருக்கவேண்டும், என்னென்ன சாதிக்க வேண்டும் என்ற திட்டமான கருத்துக்களை ஆரம்ப முதலே அவர் கொண்டிருந்தார் என்றே சொல்லலாம். - "ஜோலா. பிரான்சு நாட்டிலே இலக்கிய மன்றத் தாரால் ஏளனம் செய்யப்பட்டு, புத்தகம் எழுதுவோரால் புறக்கணிக்கப்பட்டு, மேட்டுக் குடியினரால் வெறுக்கப்பட்டு தன்பாட்டு மொழியில்ை தாட்டுக்குக் கேடு வருகிறதென்று பலர் பழித்துரைக்கக் கேட்டு, பாரிசில் பல கஷ்டங்களைப் பட்டுக் கொண்டிருந்தார். போராடிப் போராடியே, உலகின் பார்வையைத் தன் பக்கம் திருப்பினர். ஆகவே தான், எமிலி ஜோலாவால், நான”வுக்காக அனுதாபத் துடன் போராடியவரால், டிரைபசுக்காகப் போராட முடிந்தது. மற்றவர்கள் மேதை” என்ற புகழ்பெற மேட்டுக் குடியினரின் பாதசேவை செய்தனர், அரண்மனைக்கு