பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரைநடை #3? கதை மாந்தரின் உணர்ச்சிக் குழப்பங்களைச் சித்திரிக்கும் இடங்களில் லா. ச. ரா. விசேஷமான வர்ணனை நடையைக் கையாள்கிருர், விரிவான உதாரணம் ஒன்றைக் காணலாம்"அம்மாவையும் பிள்ளையையும் சேர்ந்தாற்போல் கண்டதும் ராஜியின் நெற்றியும் கன்னங்களும் கழுத்தும் சிவப்பு லாந்தரைத் தூக்கிப்பிடித்தாற்போல் குங்குமமாய்ச் சிவந்தன. ராஜத்தின் மேனி ஏற்கெனவே நல்ல சிவப்பு. வெறும் வெளிறிட்ட சிவப்பல்ல: அழகுச் சிவப்பு. பழுத்த நெற்கதிர்களின் மேல் படும் பொன் வெயிலின் தகதகக்கும் சிவப்பு. என்ன ராஜம்? சிறைப்பட்ட பறவையின் சிறகுகள் போல் ராஜத்தின் கண் இமைகள் படபடவென்று அடித்துக் கொண்டன. கனவு கலைந்த விழிகளிலிருந்து அந்தக் கனவே உருகிக் கனந் தாங்காது விழியோரங்களிலிருந்து வழிந்து அவள் கணவன் இதயத்துள் கொட்டி விழுந்து, விழுந்த இடங்களைத் தஹறித்தன. சிவராஜனுக்கு உடல் பரபரத்தது. ‘ராஜம், மாடிக்கு வா!' கவிந்த தலையுடன் ராஜம் அவனை மாடிக்குத் தொடர்ந்தாள். கொண்டையில் வில்லாய்ச் செருகிய மல்லிகையின் மணம் கம்மென்று சாவித்ரியின் மேல் மோதியது. சாவித்ரி அப்படியே திகைத்து நின்ருள். முற்றத்தில் மரத் தொட்டி ஜனத்தில், நன்ருய்ச் சிறகுகளைக் கோதி, மூக்கை உள்ளே விட்டு அலசி, ஆற அமர ஒரு காக்கை குளித்துக் கொண்டிருந்தது. அதை ஒட்ட வேணும் என்று உள் நினைவில் ஒர் எண்ணம் எழுந்து அவளைத் தூண்டிக் கொண்டிருந்ததே தவிர, அதைச் செயலாக்க உடல் மறுத்துவிட்டது. அதன் மேல் திடீரென ஒளுன் கொடி படர்ந்தது; மேலே சிலந்திக் கூடு கட்டி, பூஞ்சைக்