பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரைநடை #5i குழந்தைகள் விடும் காகிதக் கப்பல் போல், தான் சுழலில் அடித்துக் கொண்டு போவதை உணர்ந்தாள். அந்த மூல மூர்க்க ஆனந்தத்தில், மூழ்கித் திணறும் மூச்சு நுனியில் கடைந்தெழுந்து என்னங்கள் உருவாகையில், அவை தண்ணிருன் பேசிய பேச்சுப் போல் சத்தம் இழந்து வார்த் தைகள் இழந்து வேகத்தில் வரம்புகளும் இழந்து வெற்ருய் நின்று பம்பரமாய் ஆடும் ஒன்றிலிருத்து வெறும் நீயும் நானு மாய்ப் பிரிந்து அவைகளின் pவளுய் மாத்திரம், சுருதி யோசை வெள்ளத்தில் நீந்துகையில், உடல் தாங்க முடியாது மூர்ச்சையில் மூழ்கிப் போளுள்." (தாrாயணி) மனிதரின் பிரமைகளையும் கனவுகளையும் ஆசைகளையும் அனுபவங்களையும் நேரடியாகவோ கற்றி வளைத்தோ, அலங்காரமாகவோ கொச்சையிலோ எடுத்துச் சொன்கு லும், லா. ச. ராமாமிர்தம் நம்பிக்கை வறட்சியை, விரக்தியை, கசப்பை, வெறுமையைத் தமது எழுத்துக்களின் அடிநாதமாகக் கொண்டிருக்கவில்லை. வாழ் க் ைக யி ன் இனிமைகளை, ரசங்களை, அழகுகளைச் சித்திரிக்கிற போதே உயிரின் சக்தியை, தைரியத்தை, நம்பிக்கையை உபதேசம் போல் எளிமையாகவும் அழுத்தமாகவும் எழுதிச் செல் கிருர் அவர். அப்படி அவர் எழுதுவது ஒரு தனி அழகுடன் விளங்குகிறது. 'ஆசையாகப் பறித்து, சிரத்தையாக உன் கையால் நீயே தொடுத்து, கொண்டையில் அலங்காரமாக இன்றைச் சாயந்திரம் செருகிக் கொண்ட பூவை நாளைக்காலே நீ தானே அதே கையால் பிய்த்து எறிகிருய்? அதை நீ புரிந்து கொண்டால் எல்லாமே புரிந்து கொண்ட மாதிரி. அதன் மனம் மாத்திரம் சில சமயங்களில் நாள் கணக்கில் கூந்தலில் தங்கிப் போகிறது. அதுதான் அதன் தைரியம். அதுமாதிரிதான் எல்லாம். இந்த நிமிஷம் பூத்து அடுத்த திமிஷம் கசங்கிப் போகும் பூவுக்கு இவ்வளவு தைரியம் இருந்தால், நமக்கு இன்னும் எவ்வளவு இருக்க வேண்டும்? தைரியந்தான் சக்தி, தைரியந்தான் உயிர்.”