பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரை தடை #6; உணர்ச்சிகளையும் வெளியிடுவதற்கு, எல்லா பருவங்களிலும் உள்ளவர்களும் புரிந்துகொள்ளும் படியாக ஒரே மாதிரி யான, ஸ்டண்டர்டான ஒரு எளிய நடையைத்தான் கையாளவேண்டும் என்பதற்கு சவாலாக உள்ளது. ஜேம்ஸின் உரைநடை. இந்த தமிழ்நடையும் அப்படி இருக்கலாம். சற்று ஊன்றி ஈடுபட்டால் இந்த நடையும் இன்பம் தருவதை உணரமுடியும்.' செல்லப்பாவின் மொழிபெயர்ப்பு நடைக்கு உதாரணம் தரவேண்டியது அவசியமாகும். புரூக் ஸ்மித் கதையிலிருந்து சில வரிகள் இங்கே எடுத்தெழுதப் பெற்றுள்ளன “ஒரு சீமாட்டி வீட்டில் பிரமுகர்கள் வழக்கமாக கூடும் ஒரு ஏற்பாடு பற்றி பலர் நிறைய கேட்டிருக்கிருர்கன், அதில் பெரும்பாலோர் நிச்சயமாக பார்த்ததே இல்லை என்ருலும், சமூக வாழ்விலேயே உத்தம அம்சமான இது இங்கிலீஷ் மொழி பேசப்படும் இடத்தில் மரை மறுக்கிறது எனறு உணரும் அளவுக்கு மனச் சோர்வு கொண்டவர்க ளாகவே இருக்கிருர்கள். வழக்கமாகச் சொல்லப்படும் சமாதானம். நமது பெண்மணிகளுக்கு அதை-குறிப் புணர்த்தல் சுரைகளுக்கு இடையே புன்னகை நிலவழியே ஒரு சுழற்சியான சம்பாஷணை ஓடையை செலுத்திச் செல்லும் வி த் ைத ைய - வளர்த்துக்கொள்ளும் ஒரு சாமர்த்தியம் இல்லை என்பதுதான். மிஸ்டர் ஆஃபர்டைப் பற்றி அபிமானமும் மரியாதையும் கலந்த என் ஞாபகங்கள் இந்த அனுமானத்தை மறுப்பதாக இருக்கின்றன. பைட மாக அதை உறுதிப்படுத்துவதற்கோ என்று கூட எனக்கு அச்சம். தன் வாழ்நாளில் கடைசி ஆண்டுகளில் அவ்வளவு பெரும் பகுதியை அவர் கழித்த அந்த பழுப்பேறிய, லேசாகப் புகைபடிந்த கொலுவறை நிச்சயமாக அந்த தனிப் பெரும் பெயரை பெறத்தக்கதுதான்."